கலிங்கத்துப்பரணி – செயங்கொண்டார்

பரணி

போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

கலிங்கத்துப்பரணி

  • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல் கலிங்கத்துப்பரணி.
  • தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி நூல் கலிங்கத்துப்பரணி ஆகும்.
  • கலிங்கத்துப்பரணி (முதலாம்) 1ம் குலோத்துங்கச் சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப் போர் வெற்றியைப் பேசுகிறது.
  • கலிங்கத்துப்பரணி நூலை தென் தமிழ்த் தெய்வ பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்
  • கலிங்கத்துப்பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது.
  • கலிங்கத்துப்பரணி 599 தாழிசைகள் கொண்டது.

செயங்கொண்டார்

  • செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • 1ம் குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் செயங்கொண்டார் திகழ்ந்தார்.
  • செயங்கொண்டாரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.

படை வேழம்

கலிங்கப் படையின் நடுக்கம்

பாடல்

எதுகொல் இது மாயை ஒன்றுகொல் எரிகொல்**

மறலி கொள் ஊழியின் கடை அதுகொல் என அலறா

இரிந்தனர்

அலதி குலதியொடு ஏழ் கலிங்கரே**

பாடலின் பொருள்

  • சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர்
  • இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர் தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர்
  • சோழர் படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்
  • தமது இறுதிக்காலம் நெருங்கி விட்டதா என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.

கலிங்கர் தோற்றுச் சிதைந்தோடல்

பாடல்

வழிவர் சிலர் கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்

வழி தேடி வன்பிலம் இழிவர் சிலர் சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒருவழி போகல் இன்றியே **

பாடலின் பொருள்

  • அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்
  • சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.
  • எத்திசையில் மறைவது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

பாடல்

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்

அருவர் வருவர் எனா இறைஞ்சினர் அபயம் அபயம் என

நடுங்கியே*

பாடலின் பொருள்

  • கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர்
  • தஞ்சம் வேண்டி வணங்கினர்.

பாடல்

மழைகள் அதிர்வன போல் உடன்றன வளவன் விடுபடை வேழம்

என்றிருள் முழைகள் நுழைவர்கள் போரில்

இன்று நம் முதுகு செயும் உபகாரம் என்பரே

பாடலின் பொருள்

  • சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின
  • அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்
  • ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப் பிழைத்தனர்.

சொல்லும் பொருளும்

  • மறலி  – காலன்
  • வழிவர் – நழுவி ஓடுவர்
  • கரி – யானை
  • தூறு – புதர்
  • மண்டுதல்  – நெருங்குதல்
  • அருவர் – தமிழர்
  • இறைஞ்சினர் – வணங்கினர்
  • உடன்றன – சினந்து எழுந்தன
  • முழை / பிலம் – மலைக் குகை

முந்தைய ஆண்டு வினாக்கள்

“எனக்கு மிக விருப்பமான இலக்கியம்” கலிங்கத்துப்பரணியே – இப்படிக் கூறியவர் (4 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) திரு.வி. கல்யாண சுந்தரம்
(B) பெரியார்
(C) அண்ணாதுரை
(D) மு.வரதராசன்

ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?
(A) உலா
(B) தூது
(C) பரணி
(D) பள்ளு

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனும் பாடல் வரிகள் இடம் பெற்ற இலக்கண நூல்
(A) தொல்காப்பியம்
(B) நன்னூல்
(C) பன்னிருபாட்டியல்
(D) தண்டியலங்காரம்

சொற்களை ஒழுங்குபடுத்துக
(A) பரணி வென்றதைப் பாடும் இலக்கியம் பகைவரை ஆகும்
(B) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்
(C) பரணி பாடும் இலக்கியம் பகைவரை வென்றதை ஆகும்
(D) பகைவரை வென்றதை இலக்கியம் பரணி பாடும் ஆகும்
(E) விடை தெரியவில்லை

கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன்
(A) செயங்கொண்டார்
(B) மூன்றாம் நந்திவர்மன்
(C) முதற் குலோத்துங்க சோழன்
(D) தொண்டைமான்
(E) விடை தெரியவில்லை

பின்வருவனவற்றுள் சிற்றிலக்கிய வகை நூல்
(A) நாலடியார்
(B) கலிங்கத்துப்பரணி
(C) பழமொழி நானூறு
(D) இன்னாநாற்பது

கலிங்கத்துப்பரணி – நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
(A) 596
(B) 599
(C) 593
(D) 597

“நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
(A) வங்கத்துப் பரணி
(B) திராவிடத்துப் பரணி
(C) கலிங்கத்துப் பரணி
(D) தக்கயாகப் பரணி
‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?
(A) ஒட்டக்கூத்தர்
(B) பரணர்
(C) குமரகுருபரர்
(D) பிசிராந்தையார்
“பரணிக்கோர் சயங்கொண்டான்”
என்று கலிங்கத்துப்பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்
(A) பலபட்டடைச் சொக்கநாதர்
(B) குமரகுருபரர்
(C) தாயுமானவர்
(D) இராமலிங்கர்

‘உலாமடல்’ என்னும் நூலின் ஆசிரியர்
(A) ஒட்டக்கூத்தர்
(B) செயங்கொண்டார்
(C) கம்பர்
(D) பெருஞ்சித்திரனார்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!