- கவிமணி தேசிக விநாயகனார் இருபதாம் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
- கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் தேசிக விநாயகனார்.
- கவிமணி தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தார்.
- கவிமணி தேசிக விநாயகனார் (முப்பத்தாறு) 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
கவிமணி தேசிக விநாயகனார் எழுதியுள்ள கவிதைகள்
- ஆசிய ஜோதி
- மலரும் மாலையும்
- மருமகள் வழி மான்மியம்
- கதர் பிறந்த கதை
கவிமணி தேசிக விநாயகனார் எழுதியுள்ள மொழிபெயர்ப்பு நூல்
- உமர்கய்யாம் பாடல்கள்
- ஆசிய ஜோதி
ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது ஆசிய ஜோதி.
ஆசிய ஜோதி நூலை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகனார்
புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது ஆசிய ஜோதி.
பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது ஆசிய ஜோதி.
ஆசிய ஜோதி நூலில் பிம்பிசாரர் மன்னனுக்கு புத்தர் கூறிய அறிவுரை இடம்பெற்றுள்ளது.
முந்தைய ஆண்டு வினாக்கள்
‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) திரு.வி.க
(B) கவிமணி
(C) இரசிகமணி
(D) நாமக்கல் கவிஞர்