கவிமணி தேசிக விநாயகனார்

  • கவிமணி தேசிக விநாயகனார் இருபதாம் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
  • கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் தேசிக விநாயகனார்.
  • கவிமணி தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தார்.
  • இவரது இயற்பெயர் சிவதாணுப்பிள்ளை.
  • கவிமணி தேசிக விநாயகனார்  (முப்பத்தாறு) 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
கவிமணி தேசிக விநாயகனார் எழுதியுள்ள கவிதைகள்
  • ஆசிய ஜோதி
  • மலரும் மாலையும்
  • கதர் பிறந்த கதை
  • மருமகள் வழி மான்மியம்
கவிமணி தேசிக விநாயகனார் எழுதியுள்ள மொழிபெயர்ப்பு நூல்
  • உமர்கய்யாம் பாடல்கள்
ஆசிய ஜோதி
  • ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது ஆசிய ஜோதி.
  • ஆசிய ஜோதி நூலை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகனார்
  • புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது ஆசிய ஜோதி.
  • பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது ஆசிய ஜோதி.
  • ஆசிய ஜோதி நூலில் பிம்பிசார் மன்னனுக்கு புத்தர் கூறிய அறிவுரை இடம்பெற்றுள்ளது.
ஆசிய ஜோதி – கவிமணி தேசிக விநாயகனார்
  • பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும்.
  • பிம்பிசார் மன்னனுக்கு புத்தரின் அறிவுரை.
  • லைட் ஆஃப் ஆசியா – எட்வின் அர்னால்டு எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்டது

முன்கதைச் சுருக்கம்

  • பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக கொண்டு செல்லப்பட்ட, வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியின் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தினார் புத்தர்.

கவிதை

நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே துன்று கருணை நிறைந்த வள்ளல் – அங்கு சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா!

வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும் * *

வீழும் உடலை எழுப்புதலோ – ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா **

யாரும் விரும்புவது இன்னுயிராம் – அவர் என்றுமே காப்பதும் அன்னதேயாம் பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் – படும் பாடு முழுதும் அறிந்திலீரோ?

நேரிய உள்ளம் இரங்கிடுமேல் – இந்த நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம் * *

பாரினில் மாரி பொழிந்திடவே – வயல் பக்குவ மாவது அறிந்திலீரோ?

காட்டும் கருணை உடையவரே – என்றும் கண்ணிய வாழ்வை உடையவராம்

வாட்டும் உலகில் வருந்திடுவார்- இந்த மர்மம் அறியாத மூடரையா!

காடு மலையெலாம் மேய்ந்து வந்து – ஆடுதன் கன்று வருந்திடப் பாலையெல்லாம்

தேடிஉம் மக்களை ஊட்டுவதும் – ஒரு தீய செயலென எண்ணினீரோ?

அம்புவி மீதில் இவ்ஆடுகளும் – உம்மை அண்டிப் பிழைக்கும் உயிரலவோ? நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில் நன்மை உமக்கு வருமோ ஐயா?

ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் – ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ?

தீயவும் நல்லவும் செய்தவரை – விட்டுச் செல்வது ஒருநாளும் இல்லை ஐயா! **

ஆதலால் தீவினை செய்யவேண்டா – ஏழை ஆட்டின் உயிரையும் வாங்க வேண்டா

பூதலந் தன்னை நரகம் அது ஆக்கிடும் புத்தியை விட்டுப் பிழையும் ஐயா!

சொல்லும் பொருளும்

  • அஞ்சினர்பயந்தனர்
  • கருணை இரக்கம்
  • வீழும் விழும்
  • ஆகாது முடியாது
  • நீள்நிலம் பரந்த உலகம்
  • பார்உலகம்
  • முற்றும் முழுவதும்
  • மாரிமழை
  • கும்பி வயிறு
  • பூதலம் பூமி

வருமுன் காப்போம் கவிமணி தேசிக விநாயகனார்

  • நோயற்ற வாழ்வை குறைவற்ற செல்வம்என்பதை கூறும் கவிதை.
  • மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
  • நல்ல உணவு, உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவை நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை.

கவிதை

உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம் ***

இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ? ***

சுத்தம் உள்ள இடமெங்கும் சுகமும் உண்டு நீயதனன நித்தம்நித்தம் பேணுவையேல் நீண்ட ஆயுள் பெறுவாயே!

காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே! ***

கூழையே நீ குடித்தாலும் குளித்த பிறகு குடியப்பா ஏழையே நீ ஆனாலும், இரவில் நன்றாய்

உறங்கப்பா! மட்டுக்குணவை உண்ணாமல் வாரி வாரித் தின்பாயேல் திட்டுமுட்டுப் பட்டிடுவாய்! தினமும் பாயில் விழுந்திடுவாய்!

தூய காற்றும் நன்னீரும், சுண்டப் பசித்த பின் உணவும் நோயை ஓட்டிவிடும் அப்பா! நூறு வயதும் தரும் அப்பா! 

அருமை உடலின் நலமெல்லாம் அடையும் வழிகள் அறிவாயே! வருமுன் நோயைக் காப்பாயே! வையம் புகழ வாழ்வாயே!

சொல்லும் பொருளும்

  • நித்தம் நித்தம்நாள்தோறும்
  • மட்டுஅளவு
  • வையம்உலகம்
  • பேணுவையேல்பாதுகாத்தல்
  • சுண்டநன்கு
  • திட்டுமுட்டுதடுமாற்றம்

முந்தைய ஆண்டு வினாக்கள்

“ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு” என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
(A) வ. உ. சிதம்பரம்
(B) டி.கே. சிதம்பரம்
(C) சிதம்பர சுவாமி
(D) சிதம்பர நாதன்

உமர்கய்யாம், ‘ரூபாயத் என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
(A) எட்டடிச்செய்யுள்
(B) இரண்டடிச் செய்யுள்
(C) நான்கடிச் செய்யுள்
(D) இவை எல்லாம் தவறானவை

“மருமக்கள் வழி மான்மியம்”. – என்ற நூலை எழுதியவர்
(A) கவிமணி
(B) சிவதாமு
(C) பாரதிதாசன்
(D) புதுமைப்பித்தன்
‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’-யார் கூற்று?
(A) பம்மல் சம்பந்தனார்
(B) சங்கரதாசு சுவாமிகள்
(C) கவிமணி
(D) பரிதிமாற்கலைஞர்

சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் என்ற பாடல் வரிகளை இயற்றிய கவிஞர்
(A) கவிமணி
(B) நாமக்கல் கவிஞர்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்

தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர்
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) சுரதா
(D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

“நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம்வாழ்வில்
ஓதித்தொழு(து) எழுக ஓர்ந்து”
இவ்வாறு திருக்குறளின் பெருமையைப் பாடியவர் யார்?
(A) கபிலர்
(B) கவிமணி
(B) ஔவையார்
(D) பரணர்

‘காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே’ என்று பாடியவர்
(A) திருமூலர்
(B) கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்

‘நாடகச் சாலையொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ என்று கூறியவர்
(A) பாரதியார்
(B) நாமக்கல் கவிஞர்
(C) சங்கரதாசு சுவாமிகள்
(D) கவிமணி தேசிக விநாயகனார்

‘கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்து’ என்ற தாலாட்டுப் பாடலைப் பாடியவர் யார்?
(A) இராமலிங்கப் பிள்ளை
(B) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(C) பால்வண்ணப் பிள்ளை
(D) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

“சீடைக் காகச் சிலேட்டு பணயம்
முறுக்குக் காக மோதிரம் பணயம்
காப்பிக் காகக் கடுக்கன் பணயம்”
இப்பாடலின் ஆசிரியர் யார்?
(A) கவிமணி தேசிக விநாயகம்
(B) கவிப்பேரரசு வைரமுத்து
(C) கவிஞர் மு. மேத்தா
(D) குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!