அரசர்
- அரசர்கள் மகாராஜாதிராஜா, சாம்ராட், சக்ரவர்த்தி, பரம–பட்டாரக, பரமேஷ்வர போன்ற பட்டங்களை ஏற்றார்கள்.
- பரம–தைவத (கடவுளின் பரமபக்தன்), பரம–பாகவத (வாசுதேவ கிருஷ்ணனின் பரமபக்தன்) போன்ற அடைமொழிகளால் தம்மைக் கடவுளோடும் இணைத்துக் கொண்டனர்.
- அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
- குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
- அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார்.
அமைச்சர்கள், அதிகாரிகள்
- “குமாரமாத்யா“ என்ற சொல் ஆறு வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது.
- “குமாரமாத்யா“ என்பது அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவியாக, அரசகுல இளவரசர்களின் தகுதிக்குச் சமமானதாக இருக்கும் போல் தெரிகிறது.
- அலகாபாத் பிரசஸ்தியை (மெய்க்கீர்த்தி அல்லது புகழுரைக் கல்வெட்டு) எழுதிய ஹரிசேனர் ஒரு குமாரமாத்யா, சந்திவிக்ரஹிகா, மஹாதண்டநாயகா ஆகிய பட்டங்களைக் கொண்டவராக இருந்துள்ளார்.
- அவர் மஹாதண்டநாயகா துருவபூதியின் புதல்வர் ஆவார்.
அமைச்சர் குழு
- மஹாசந்திவிக்ரஹா என்பவர் அமைச்சர்களில் உயர்நிலையில் இருந்துள்ளார்.
- இவர் அமைதி மற்றும் போருக்கான அமைச்சர்.
- நீதித்துறை, ராணுவம் ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர் தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா என்றழைக்கப்பட்டுள்ளார்.
பேரரசின் பிரிவுகள்
- குப்தர்களின் பேரரசு “தேசம்‘ அல்லது ‘புக்தி‘ எனப்படும் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
- உபாரிகாக்கள் அரசரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.
- உபாரிகாக்கள் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும், வாரிய அதிகாரிகளையும் நியமித்தனர்.
- உபாரிகாக்கள் நிர்வாக அதிகாரத்தோடு, யானைகள், குதிரைகள், வீரர்கள் என்று ராணுவ நிர்வாகத்தையும் கையில் வைத்திருந்தனர்.
- லோகபாலா என்பது மாநில ஆளுநரைக் குறிப்பிடுவதாகலாம்.
- குப்தபேரரசின் மாநிலங்கள் விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை விஷ்யா என அழைக்கப்பட்டன.
- ‘தூதகா‘ எனும் ஒற்றர்களை உள்ளடக்கிய வேவு பார்க்கும் அமைப்பும் செயல்பட்டது.