குப்தர் கால அறிவியல்

கணிதமும், வானவியலும்

  • சுழியம் என்ற கருத்தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • பூமி ஒரு அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் வானவியலாளர் ஆர்யபட்டர்.
  • கணிதம், கோணவியல், அல்ஜீப்ரா ஆகியவற்றைப் பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலில் அவர் எழுதினார்.
  • வராகமிகிரரின் (ஆறாம் நூற்றாண்டு) பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகும்.
  • பிரம்மகுப்தர் கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரம்மஸ்புத சித்தாந்தா, கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

மருத்துவ அறிவியல்

  • நவனிதகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறுகிறது.
  • பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.
  • மருத்துவத் துறையில் புகழ் பெற்ற அறிஞர் தன்வந்திரி ஆவார். அவர் ஆயுர்வேத மருத்துவத்தில் நிபுணராகத் திகழ்ந்தார்.
  • சாரக்கர் ஒரு மருத்துவ அறிவியல் அறிஞராவார்.
  • சுஸ்ருதர் அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் ஆவார்.

குப்தப் பேரரசின் வீழ்ச்சி

  • குப்த வம்சத்தின் கடைசி அரசராக அறியப்படுபவர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.ஆ. 540 முதல் 550 வரை ஆட்சி செய்தார்.
  • உள்நாட்டுப் பூசல்களும், அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
  • ஹூணர் படையெடுப்பால், நாட்டின் மீது குப்தர்களின் பிடி தளர்ந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!