- இடையீடு கவிதையை எழுதியவர் சி. மணி.
- சி. மணியின் இயற்பெயர் சி. பழனிச்சாமி ஆகும்.
- 1959-ஆம் ஆண்டு முதல் சி. மணியின் கவிதைகள் ‘எழுத்து’ இதழில் தொடரந்து வெளிவந்தன.
- ‘நடை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் சி. மணி.
- சி. மணி ஆங்கிலப் (English) பேராசிரியராக பணியாற்றினார்.
Contents show
சி. மணியின் சிறப்புகள்
- புதுக கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர் சி. மணி.
- இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர் சி. மணி.
சி. மணி எழுதியுள்ள நூல்கள்
- ‘தாவோ தே ஜிங்’ எனும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- இலக்கணம் பற்றிய ‘யாப்பும் கவிதையும்
கவிதைத் தொகுப்புகள்
- ஒளிசேர்க்கை
- வரும் போகும்
சி. மணி பெற்றுள்ள விருதுகள்
- ஆசான் கவிதை விருது
- விளக்கு விருது
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது
- கவிஞர் சிற்பி விருது
சி. மணியின் புனைபெயர்கள்
- வே. மாலி
- செல்வம்
இடையீடு – சி. மணி
கல்வியின் சிறப்பு
- தேடலை விரிவாக்குவது கல்வி. சாதிக்கும் திறமையும் சறுக்கல்களில் நம்பிக்கையாய் நமக்குத் துணை நின்று காக்கும் அறிவையும் வழங்க வல்லது கல்வி.
- கற்பிப்பதும் கற்பதும் ஒருங்கிணைதல் கற்றலில் வெற்றியைத் தரும்.
- கொடுக்கின்ற மனதின் செய்திகளை வாங்குகின்ற மனம் அப்படியே ஏற்பதில்லை.
- கற்பித்தல், கற்றல் இரண்டிற்குமிடையை இடையீடுகள் நேர்வதும் உண்டு. எதிர்பாராத நல்ல விளைவுகளும் கிடைப்பதுண்டு.
இடையீடு கவிதை
- இடையீடு கவிதை, சி. மணியின் (சி. பழனிச்சாமி) ‘இதுவரை’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
இடையீடு கவிதையில் குறியீடுகள்
- குறியீடுகளைக்கொண்டு அமைந்தது. அதனால் பன்முகப் பொருள் கொண்டது இடையீடு கவிதை எழுதியவர் சி.மணி.
- கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது இடையீடு கவிதை எழுதியவர் சி.மணி.
கவிதை**
சொல்ல விரும்பியதெல்லாம் சொல்லில் வருவதில்லை ***
எத்தனையோ மாற்றங்கள் குறி தவறிய ஏமாற்றங்கள் மனம் புழுங்கப் பலவுண்டு ***
குதிரை வரையக் குதிரையே வராது, கழுதையும் வரலாம். இரண்டும் கலக்கலாம். ***
எலிக்குப் பொறி வைத்தால் விரலும் விழுவதுண்டு. ***
நீர் தேடி அலையும் போது இளநீரும் கிடைக்கும். ***
என்றோ ஒரு முறை வானுக்கு விளக்கடிக்கும் வால் மீனாக சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும், கேட்பதில் சிக்கல் ***
கனியின் இனிமை கனியில் மட்டுமில்லை, சுவைப்போன் பசியை, சுவை முடிச்சைச் சார்ந்தது ***
எண்ணம் வெளியீடு கேட்டல் இம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல ஒன்றென்றால் மூன்றான காலம் போல் ஒன்று ***