பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  • பாவலரேறு (துரை.மாணிக்கம்) பெருஞ்சித்திரனார்
  • பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை மாணிக்கம் (பெருஞ்சித்திரனார்).
  • பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் பெருஞ்சித்திரனார்.
  • தமிழுக்கு கருவூலமாய் அமைந்துள்ளது பெருஞ்சித்திரனார் எழுதிய திருக்குறள் மெய்ப்பொருளுரை.
  • தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் பெருஞ்சித்திரனார்.
  • பெருஞ்சித்திரனாரது நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன,
Contents show
பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்
  • தென் மொழி
  • தமிழ் சிட்டு
  • தமிழ் நிலம்
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்
  • மகபுகு வஞ்சி.
  • பாவியக் கொத்து,
  • பள்ளிப் பறவைகள்
  • கொய்யாக்கனி
  • நூறு (100) ஆசிரியம்
  • எண் சுவை (80) எண்பது
  • உலகியல் (100)நூறு
  • கனிச்சாறு
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் பாடப்பகுதியில் உள்ளவை
  • அன்னை மொழியே – கனிச்சாறு (தொகுதி ஒன்று)(1)
  • தமிழ் கும்மி – கனிச்சாறு (தொகுதி எட்டு)(8)
பெருஞ்சித்திரனாரின் மேற்கோள்கள்
  • எந் தமிழ் நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்? – பெருஞ்சித்திரனார்
  • முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே! – அன்னை மொழியே
  • ஊழி பல நூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல் பல கொண்டதுவாம் – தமிழ்க்கும்மி
  • பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – தமிழ்க்கும்மி
  • உயிர் மெய் புகட்டும் அற மேன்மை கிட்டும் இந்த மேதினி வாழ் வழி காட்டிருக்கும் – தமிழ்க்கும்மி

 

அன்னை மொழியே – (தமிழ்கும்மி-கனிச்சாறு) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • அன்னை மொழியே நூலின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
  • அன்னை மொழியே நூலின் ஆதார நூல் கனிச்சாறு (தொகுதி ஒன்று)(1).
கனிச்சாறு
  • கனிச்சாறு நூலை எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
  • கனிச்சாறு (8)எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
  • கனிச்சாறு தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.
கனிச்சாறு நூலில் எடுத்தாளப்பட்டுள்ள பகுதிகள்
  • தமிழ்தாய் வாழ்த்து
  • முந்துற்றோம் யாண்டும்
அன்னை மொழியே – கனிச்சாறு ஒப்பீடு
  • அழகார்ந்த செந்தமிழே! – தமிழ்தாய் வாழ்த்து
  • செப்பரிய நின்பெருமை – முந்துற்றோம் யாண்டும்
  • அன்னை மொழியே கவிதையின் மைய கருத்து, தமிழ் மொழியின் செழுமையை போற்றுதல்
தமிழ் தாயின் குணங்கள்
  • சின்னக் குழந்தையின் சிரிப்பும் ஆனவள்,
  • பழுத்க நரையின் பட்டறிவும் ஆனவள்,
  • வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டவள்.
  • உணர்ந்து கற்றால் கல் போன்ற மனத்தையும் கற்கண்டாக்குபவள்,
  • அறிவைப் பெருக்குபவள்.
  • அன்பை வயப்படுத்துபவள்.
அழகார்ந்த செந்தமிழே! தமிழ்தாய் வாழ்த்து கவிதை

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலப் பேரரசே!*

தென்னவன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!*

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!*

முன்னும் நினைவால் முடி தாழ வாழ்த்துவமே!

பாடலின் பொருள்
  • அன்னை மொழியே! அழகு நிறைந்த செந்தமிழே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
  • கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே! *
  • பாண்டிய மன்னனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்கு உரியவளே! *
  • பத்துப் பாட்டே! எட்டுத்தொகையே! பதினெண் கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே! *
  • பொங்கியெழும் நிணைவுகளால் தலை பணிந்து வாழ்த்துகின்றோம்.
சொல்லும் பொருளும்
  • மன்னி அரசிருந்த – நிலைத்து அரசாண்ட
  • தென்னவன் மகளே! – பாண்டிய மன்னனின் மகளே
  • மாண்புகழே! – திருக்குறள்
  • இன்னறும் பாப்பத்தே! – பத்துப் பாட்டு
  • நற்கணக்கே! – பதினெண் கீழ்க்கணக்கு
  • மன்னுஞ் –நிலைத்தது – சிலப்பதிகாரம்
  • வடிவே! அழகானது – மணிமேகலை
  • மன்னுஞ் சிலப்பே – நிலைத்த சிலப்பதிகாரம்
  • மணிமேகலை வடிவே! – அழகான மணிமேகலை
  • முன்னும் நினைவால் – பொங்கி எழும் நினைவால்
  • செப்பரிய நின்பெருமை முந்துற்றோம் யாண்டும்
பாடல்

செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை 

எந் தமிழ் நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்? ***

முந்தைத் தனிப் புகழும் முகிழ்த்த இலக்கியமும் 

விந்தை நெடு நிலைப்பும் வேறார் புகழுரையும் 

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூளச் 

செந்தாமரை தேனைக் குடித்துச் சிற்கார்ந்த 

அந்தும்பி பாடும் அது போல யாம் பாடி 

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!*

பாடலின் பொருள்
  • செழுமை மிக்க தமிழே! எமக்கு உயிரே! சொல்லுதற்கரிய நின் பெருமைதனை என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறு தான் விரித்துரைக்கும்?
  • பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழே!
  • வியக்கத்தக்க உன்னுடைய நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உள்னைப் பற்றி உரைத்த புகழுரையும் *
  • எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன.
  • எம் தனித்தமிழே! வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து
  • உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்
சொல்லும் பொருளும்
  • முகிழ்த்த இலக்கியமும் – இலக்கிய வளம்
  • நிலைப்பு – நிலைத்த
  • வேறார் புகழுரை – வேற்று மொழியார்
  • தும்பி  – வண்டு
  • முந்துற்றோம் – முழங்குகின்றோம்
  • மன்னி, மன்னுஞ், நிலைப்பு – நிலைத்து
தமிழ்க்கும்மி (தமிழ்கும்மி -கனிச்சாறு) – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • தமிழ்க்கும்மி நூலின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
  • தமிழ்க்கும்மியின் ஆதார நூல் கனிச்சாறு (தொகுதி எட்டு) (8).
  • தமிழ்க்கும்மியின் மைய கருத்து, தமிழின் பெருமையை இசையோடு பாடி கும்மி கொட்டி ஆடுதல்,
பாடல்

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!

ஊழி பல நூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல் பல கொண்டதுவாம் *

பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்!

பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் *

உயிர் மெய் புகட்டும் அற மேன்மை கிட்டும் இந்த மேதினி வாழ் வழி காட்டிருக்கும் !*

பாவலரேறு பெருஞ்சித்திரனார் கூறும் தமிழ் மொழியின் சிறப்பு

  • பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ் மொழி.
  • அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி.
  • பெரும் கடல் சீற்றங்கள். கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி பொய்யை அகற்றும் மொழி.
  • மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி.
  • அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி. உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி, உயர்ந்தஅறத்தைத் தரும் மொழி.
  • இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி.
சொல்லும் பொருளும்
  • ஆழிப் பெருக்கு – கடல் கோள்
  • ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
  • மேதினி – உலகம்
  • உள்ளப்பூட்டு – உள்ளத்தின் அறியாமை
கும்மி
  • கூட்டமாகக் கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம்.
  • கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும்.
  • தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம்; காதாரக் கேட்கலாம் இசையோடு பாடலாம்: கும்மி கொட்டி ஆடலாம்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.
(A) இந்தியா
(B) குயில்
(C) தமிழ்ச்சிட்டு
(D) மணிக்கொடி

துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
(A) மீரா
(B) முடியரசன்
(C) கண்ணதாசன்
(D) பெருஞ்சித்திரனார்

பொருந்தாத இணையைக் கண்டறிக:
(A) வீரமாமுனிவர் – பரமார்த்த குருகதை
(B) தேவநேயப்பாவாணர் – தமிழர் திருமணம்
(C) திரு.வி.க. – சைவத்திறவு
(D) பெருஞ்சித்திரனார் – தமிழ்ச்சோலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!