சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
- இயற்கையின் அழகு நிலவின் குளிர்ச்சி, கதிரவனின் வெம்மை, மழையின் பயனையும் போற்றும் வாழ்த்துப் பாடல்
பாடல் ***
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ் அங்கண் உலகு அளித்தலான்**
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் * *
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல் நின்று தான் சுரத்தலான்**
– இளங்கோவடிகள்
பாடலின் பொருள்
- தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி பொருந்தியது.
- அதைப் போலவே வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம்.
- காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன்
- அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது
- அதனால் கதிரவனைப் போற்றுவோம்!
- அச்சம் தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான்.
- அதுபோல, மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. அதனால் மழையைப் போற்றுவோம்!
சொல்லும் பொருளும்
- திங்கள் – நிலவு
- அலர் – மலர்தல்
- பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்
- நாம நீர் – அச்சம் தரும் கடல்
- கொங்கு – மகரந்தம்
- திகிரி – ஆணைச்சக்கரம்
- மேரு – இமயமலை
- அளி – கருணை
பாடலின் சுருக்கம்
- வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்! மாலை அணிந்த சோழனின் குளிர்ந்த வெண்குடை போல அருளை வழங்கும் வான்நிலா போற்றுவோம்! வான்நிலா போற்றுவோம்!
- கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்! காவிரி நாடன் சோழனின் ஆணைச் சக்கரம் போலவே இமயத்தை வலம்வரும் கதிரவன் போற்றுவோம்! கதிரவன் போற்றுவோம்!
- வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்! கடல்சூழ் உலகுக்கு அருளைப் பொழியும் மன்னனைப் போல முகில்வழி சுரக்கும் வான்மழை போற்றுவோம்! வான்மழை போற்றுவோம்!
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————