செயலகத்தின் பணிகள்
செயலகம் ஒரு ஆலோசனைச் செயலியாக இருந்துகொண்டு பொதுக் கொள்கைகளின் அமுலாக்கத்தில் செயல்துறைகளுக்கு ஆலோசனை வழங்கக் கடமைப்பட்டுள்ளது.
அதன் அடிப்படைப் பணியாக இருப்பது அமைச்சர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு உதவி புரிவதாகும்.
- மாநில அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் செயலகம் உருவாக்குகிறது.
- மாநில அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் அது ஒருங்கிணைக்கிறது.
- மாநில வரவுசெலவுத் திட்டத்தை அது தயாரிக்கிறது. மற்றும் பொதுச் செலவினத்தின் மீது கட்டுப்பாடு விதிக்கிறது.
- சட்டங்கள் மற்றும் விதிகளை அது தயாரிக்கிறது.
- முகமைகளால் அமுலாக்கம் செய்யப்படுகின்ற கொள்கைகளையும்
- திட்டங்களையும் அது மேற்பார்வையிடுகிறது.
- பொதுக் கொள்கைகளின் அமுலாக்க முடிவுகளை அது ஆய்கிறது.
- மற்ற மாநில அரசாங்கங்களுடன் அது தொடர்புகளை நிலைநிறுத்துகிறது.
- அமைப்பு மற்றும் முறைகளின் மூலமாக அமைப்புமுறை முன்னேற்றத்தை வளர்க்க அது ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்கிறது.
- சட்டசபை உறுப்பினர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற சட்டத்துறைக்கு அமைச்சர்கள் செய்யும் பொறுப்புகளுக்கு அது உதவிபுரிகிறது.
- துறைகளின் தலைவர்களை அது நியமிக்கிறது மற்றும் சம்பளம் போன்ற அதுதொடர்பான பணிகளைக் கவனிக்கிறது.
- பணிவிதிகள் மற்றும் அவைகளின் திருத்தங்களுக்கு அது ஒப்புதல் அளிக்கிறது.
- மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்கிறது.
- மாநில அரசாங்கத்தின் ஒரு சிந்தனைக் களஞ்சியமாக அது பணிபுரிகிறது.
- செயலகத்தின் முறையான செயல்பாட்டில் தலைமைச் செயலருக்கு அது உதவுகிறது. மற்றும்
- மக்களிடமிருந்து புகார்கள், விண்ணப்பங்கள் மற்றும் முறையீடுகளைப் பெற்று அவைகளை அது தீர்த்துவைக்கிறது.