தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது உ.வே.சா

தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியவற்றை சொல்லுகிறது.

தூது இலக்கியம்

  • தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘தூது’ என்பதும் ஒன்று.
  • ‘வாயில் இலக்கியம்’, ‘சந்து இலக்கியம்’ என்னும் வேறு பெயர்களாலும் ‘தூது’ அழைக்கப்படுகிறது.
  • தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படுவது ஆகும்.
  • தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியகாக ‘மாலையை வாங்கிவருமாறு ‘அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் 10 தூது விடுவதாகக் பாடப்படுவது தூது இலக்கியம் ஆகும்.

தமிழ்விடு தூது

  • மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண் பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ள தமிழ்விடு தூது.
  • தமிழ்விடு தூது நூல் 268 கண்ணிகளைக கொண்டுள்ளது.
  • தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை. தமிழ்விடு தூது நூல் முதல் முதலில் உ.வே.சா 1930இல் பதிப்பித்தார்.

கண்ணி

  • இரண்டு கண்களைப் போல் ரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர்
  • அதே போல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.

கண்ணிகள் – 69 -76

கண்ணி

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியே என் முத்தமிழே * * *

புத்திக்குள் உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து

உரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள்

மண்ணில் குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார்

கொடுப்பாய்க்கு உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ

திறம்எல்லாம் வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த

உனைச் சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே

 

அந்தர மேல முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார் நீ குற்றம் இலாப் பத்துக் குணம் பெற்றாய்**

மற்றொருவர் ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின் மேல் உண்டோ நீ நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய்

பொருள்

இனிக்கும் தெளிந்த அமுதாய் அந்த அமிழ்தினும்

மேலான முத்தி ஆகிய விடுதலை தரும் கனியே!

இயல், இசை, நாடகம் என, மூன்றாய்ச் சிறந்து

விளங்கும் என் தமிழே!

அறிவால் உண்ணப்படும் தேனே! உன்னிடம் நான் மகிழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. அதைக் கேட்பாயாக.

தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புக் கொள்கின்றனர்.

பிறர் படிக்கும் வகையில் நீ அவற்றைக் கொண்டிருக்கிறாய்

அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ?

பாவின் திறம் அனைத்தும் பொருந்தி நின்று என்றுமே ‘சிந்தா (கெடாத) மணியாய் இருக்கும் உன்னை

இசைப்பாடல்களுள் ஒருவகையான ‘சிந்து’ என்று அழைப்பது நின் பெருமைக்குத் தகுமோ?

அவ்வாறு கூறிய நா இற்று விழும் அன்றோ?

வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்தத் தேவர்கள் கூட சத்துவம், இராசசம், தாமசம் என்னும் மூன்று குணங்களையை பெற்றுள்ளார்கள்.

ஆனால், நீயோ பத்துக் குற்றங்கள் இல்லாமல் தெறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக் குணங்களையும் பெற்றுள்ளாய்.

மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என ஐந்திற்கு மேல இல்லை

நீயே புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை, வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்

கண்ணி

நாக்குலவும் ஊன ரசம் ஆறு அல்லால் உண்டோ

செவிகள் உணவு ஆன நவரசம் உண்டாயினாய் * *

ஏனோர்க்கு அழியா வனப்பு ஒன்று அலது அதிகம்

உண்டோ ஒழியா வனப்பு எட்டு உடையாய். **

பொருள்

நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின்

சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை.

நீயே செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்

தமிழை அடையப்பெறாத மற்றையோர்க்கு அழியாத

அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டோ?

நீயே நீங்காத அம்மை முதலிய அழகுகள் எட்டினைப்

பெற்றுள்ளாய்

சொல்லும் பொருளும்

  • குறம்,பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
  • திறமெல்லாம் – சிறப்பெல்லாம்
  • சிந்தா – கெடாத

சிந்தாமணிசிதறாத மணி(சீவகசிந்தாமணி) என்னும் இருபொருளையும் குறிக்கும்

  • சிந்து – ஒருவகை இசைப் பாடல்
  • முக்குணம் – மூன்று குணங்கள்
  • ஊன ரசம் குறையுடைய சுவை
  • வனப்பு – அழகு

பாடலில் ஒப்பீடுகள்

  • உறவு (3)           –   மூன்று
  • பாவினம் (3)   –   மூன்று
  • முத்தமிழ் (3)  –   மூன்று

குணம்

  • தேவர் குணம் (3)  – மூன்று
  • தமிழின் குணம் (10) – பத்து

வண்ணம்

  • ஆக்கிய வண்ணம் (5) – ஐந்து
  • நோக்கிய வண்ணம் (100) – நூறு

ரசம்

  • நாவிற்கு ஊன ரசம் (6) -ஆறு
  • செவிக்கு நவ ரசம் (9) – ஒன்பது

வனப்பு

  • அழியா வனப்பு (1)  – ஒன்று
  • ஒழியா வனப்பு (8) – எட்டு

குறிப்புகள்

  • அசதி, மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம் – சத்துவம்
  • போர், தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம் – இராசசம்
  • சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம் – தாமசம்
  • பாவினம் (3) மூன்று
  • முத்தமிழ் (3) மூன்று

தமிழின் குணம் (10) பத்து

  1. தெளிவு
  2. சம நிலை
  3. தெறிவு
  4. உதாரம்
  5. ஒழுகிசை
  6. காந்தம்
  7. சமாதி
  8. வலி
  9. இன்பம்
  10. உய்த்தலில் பொருண்மை

ஆக்கிய வண்ணம் (5) ஐந்து

  1. வெண்மை
  2. செம்மை
  3. பொன்மை
  4. கருமை
  5. பசுமை
  • நோக்கிய வண்ணம் (100) – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு

செவிக்கு நவரசம் (9) ஒன்பது

  1. அச்சம்
  2. வியப்பு
  3. அவலம்
  4. கோபம்
  5. நகை
  6. காமம்
  7. சமநிலை
  8. வீரம்
  9. இழிப்பு

ஒழியா வனப்பு எட்டு

  1. இழைபு
  2. இயைபு
  3. விருந்து
  4. அம்மை
  5. புலன்
  6. தொன்மை
  7. தோல்
  8. அழகு

முந்தைய ஆண்டு வினாக்கள்

தமிழ்விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூலை 1930-ல் முதன் முதலில் பதிப்பித்தவர்
(A) ந.மு. வேங்கடசாமி நாட்டார்
(B) உ.வே.சா
(C) திரு.வி.க
(D) பரிதிமாற்கலைஞர்
(E) விடை தெரியவில்லை

தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்
(A) குற்றால நாதர்
(B) முருக பெருமான்
(C) மதுரை சொக்கநாதர்
(D) திருமால்
(E) விடை தெரியவில்லை

தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
(A) 268
(B) 628
(C) 228
(D) 618

தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?
(A) கபிலர்
(B) நரிவெரூஉத் தலையார்
(C) அறியப்படவில்லை
(D) ஓதலாந்தையார்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!