- இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு ஒரு தேசமாக இந்தியா இருந்தது இல்லை. கலாச்சாரம் மற்றும் மொழி அடிப்படையில் இந்தியா பல சிறு தேசங்களாக பிரிந்து இருந்தது.
- ஆனால் ஐரோப்பியர்களின் வருகை அதிலும் குறிப்பாக பிரிட்டிஸாரின் பொருளாதார சுரண்டல் இந்தியர்களை ஒன்றிணைத்தது.
- ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம், ரயில் மற்றும் தந்தி போன்ற புதிய தொழில்நுட்பங்கள் இந்தியர்களை ஒன்றிணைத்தது.
- மக்களாட்சி, குடியரசு வாக்குரிமை போன்ற புதிய தத்துவங்கள் இந்தியா என்ற நவீன தேசத்தை ஏற்படுத்தியது.
Contents show
நவீன இந்திய ஆதாரங்கள்
- இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப் பற்றி மார்க்கோ போலோ மற்றும் சில வெளிநாட்டுப் பயணிகளின் பயணக்குறிப்புகளிலிருந்து ஐரோப்பியர்கள் அறிந்து கொண்டனர்.
- ஆனந்தரங்கம் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக (Dubash) இருந்தார்.
- 1736 லிருந்து 1760 வரை அவர் எழுதிய பிரெஞ்சு இந்திய உறவு முறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் அக்காலத்தைப் பற்றி அறிய உதவும் ஒரே எழுதப்பட்ட, சமய சார்பற்ற மதிப்பு மிக்க பதிவாக நமக்குக் கிடைத்துள்ளன.
- இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுடெல்லியில் அமைந்துள்ளது. இது ஆசியாவில் உள்ள ஆவணக்காப்பகங்களிலேயே மிகவும் பெரியதாகும்.
- ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் என்பவர் இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படும் ‘சென்னை பதிப்பாசனம்’ சென்னையில் அமைந்துள்ளது.
- 1949 ல் தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் தொடங்கப்பட்டது.
- டாட்வெல் என்பவரின் பெரும் முயற்சியால் 1917ஆம் ஆண்டு ‘சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ வெளியிடப்பட்டது.
- 1690 இல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது.
இந்திய நாணயத்தின் வரலாறு
- நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி.1862 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.
- மன்னர் ஏழாம் எட்வர்டு தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்.
- மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு ஜனவரி, 1938 இல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.