நானோ தொழில்நுட்பத்தின் சில பயன்பாடுகள்:
மருந்து விநியோகம்:
- தளம் சார்ந்த மருந்து விநியோகத்திற்கு நானோ துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- இந்த தொழில் நுட்பத்தில் தேவையான மருந்தின் அளவு பயன்படுத்தப்படுவதால், குறிப்பிட்ட நோயுற்ற பகுதியில் மட்டுமே செலுத்தப்படுவதாலும் பக்க விளைவுகள் கணிசமாக குறைக்கப்படுகிறது.
செல்லை சரிசெய்தல்:
- நானோபாட்களை குறிப்பிட்ட நோய்க்கான செல்களை சரிசெய்ய திட்டமிட்டு இயற்கையான முறையில் உடலுக்கு ஏற்ற ஆன்டிபாடிகளுக்கு ஒத்தவாறு செயல்பட உதவுகிறது.
திசுபொறியியல்:
- நானோ தொழில்நுட்பத்தின் உதவியுடன், சேதமடைந்த திசுக்களை உருவாக்கலாம் அல்லது சரிசெய்யலாம்.
- இந்த செயற்கையாக தூண்டப்பட்ட செல்கள், செயற்கை உறுப்புகளை மாற்றுவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக் கூடும்.
நோய் கண்டறிதல்:
- நானோ துகள்கள் ஆன்டிபாடிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன அல்லது அவை மூலக்கூறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன அல்லது எந்த உயிரினத்திலும் உள்ள புரத கட்டமைப்பைக் காண இணைக்கப்படலாம்.
காயத்திற்கான சிகிச்சை:
- நானோ மின்னியற்றியை, நோயாளி அணிவதன் மூலம், மின்னியற்றி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி காயத்தின் தன்மையை கண்டறியும் நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
பாக்டீரியா எதிர்ப்பு சிகிச்சைகள்:
- தங்க நானோ துகள்கள் மற்றும் அகச்சிவப்பு ஒளியைப் பயன்படுத்தி பாக்டீரியாக்களை கொல்லும் ஒரு தொழில் நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
- இந்த துறை மருத்துவமனையில் பயன்படுத்தும் கருவிகளை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
புற்றுநோய் சிகிச்சை:
- நானோ துகள்களின் பரும விகிதத்திற்கு அதிக பரப்பளவைக் கொண்டுள்ளது.
- இது பல செயல்பாட்டுக் குழுக்கைளை நானோ துகள்களுடன் இணைக்க அனுமதிக்கிறது, இது சில உயிரணுக்களை தேடவும், பிணைக்கவும் செய்கிறது.
பிம்பமாக்கல்:
- இயற்கையாக (உடலுக்குள்) பிம்பமாக்கல் என்பது கருவிகள் மற்றும் சாதனங்கள் மூலம் உருவாக்கப்படும் மற்றொரு பகுதியாகும்.
- நானோ துகள்களானது மீயொலி மற்றும் எம்ஆர்ஐ போன்ற மாறுபட்ட கருவிகளைப் பயன்படுத்தி வேறுபட்ட பிம்பங்கள் (அ) படங்களை உருவாக்குகிறது.
இரத்த சுத்திகரிப்பு:
- நானோ துகள்கள் இரத்தத்தை சுத்திகரிக்க குறிப்பிட்ட இலக்கை கொண்ட பொருட்களை அனுமதிக்கிறது.
- கூடுதலாக, பொதுவாக கூழ்மமாக்க முடியாத பெரிய சேர்மங்கள் காந்த நுண்துகள்களைப் பயன்படுத்தி அகற்றலாம்.
மருத்துவ சாதனம்:
- நியூசோ-எலக்ட்ரானிக் இன்டர்பேசிங் (நியூரோ மின்னணு கிடைமுகம்) என்பது தொலைநோக்கு குறிக்கோளாகும், இது நானோ சாதனங்களின் மூலம் கணினிகளை இணைக்கும் நரம்பு மண்டல கட்டுமானமாகும்.
மரபணு வரிசைமுறை:
- தங்க நானோ துகள்கள், டி.என்.ஏ-வின் குறுகிய பிரிவுகளுக்குள் செலுத்தப்படும் போது உருவாகும் மாதிரியில் மரபணு வரிசையைக் கண்டறிய பயன்படுத்தலாம்.
ஸ்டெம் செல் தொழில்நுட்பம்:
- ஸ்டெம் செல் ஆராய்ச்சி துறையில் நானோ தொழில்நுட்பம் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது.
- எ.கா. காந்த நானோ துகள்கள் மூலம் குழுவில் உள்ள ஸ்டெம் செல்லை தனிமைபடுத்த முடியும்.