Contents show
பிரிட்டிஷின் இந்தியப் பொருளாதாரக் கொள்கை
நிலவருவாய் கொள்கை:
- நிரந்தர நிலவருவாய் திட்டம் – காரன்வாலிஸ் பிரபு
- இரயத்வாரி முறை – சர்தாமஸ் மன்றோ
- மகல்வாரி முறை – வில்லியம் பெண்டிங் பிரபு
நிரந்தர நிலவரி திட்டம் (1793)
- 1765- ல் இராபர்ட் கிளைவ் ஒரிசா, வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை கொண்டு வந்தார்.
- இத்திட்டம் வாரன்ஹேஸ்டிங்கால் ஐந்தாண்டு திட்டமாக மாற்றப்பட்டு பின் மீண்டும் ஒரு ஆண்டாக மாற்றப்பட்டது.
- 1793-ல் ஜான்ஷோர் மற்றும் ஜேம்ஸ் கிராண்டின் உதவியுடன் காரன்வாலிஸ் இத்திட்டத்தை வங்கம், பீகார், ஒரிசா, வாரணாசி மற்றும் வட கர்நாடக பகுதிகளில் அறிமுகப்படுத்தினார்.
- பிரிட்டிஷ் இந்திய பகுதிகளில் 19% பகுதிகளில் இத்திட்டம் பின்பற்றப்பட்டது.
- இம்முறை ஜமிந்தாரி முறை, ஜகிர்தாரி முறை மற்றும் பிஷ்வேதாரி முறை எனவும் அழைக்கப்படுகிறது.
திட்டத்தின் பண்புகள்:
- ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாக மாற்றப்பட்டு பிரிட்டிஷ் அரசின் முகவர்களாக செயல்பட்டனர்.
- ஜமீன்தாரர்களின் வரி நிலையானதாக மாற்றப்பட்டதோடு எந்த சூழநிலையிலும் உயர்த்தப்படாது என உறுதியளிக்கப்பட்டது.
- வருவாயில் 11 ல் 10 பங்கு பிரிட்டிஷிற்கும் மீதம் 1 பங்கு ஜமீன்தாருக்கும் பிரிந்துக்கொள்ளப்பட்டது.
- ஜமீன்தார்களால் பட்டா வழங்கப்பட்டு விவசாயிகள் குத்தகைகாரர்களாக மாற்றப்பட்டனர்.
- ஜமீன்தாரர்களின் நீதித்துறை அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டு வருவாய் வசூலிப்பது மட்டுமே, அவர்களின் பணியாக மாற்றப்பட்டது.
நிறைகள்:
- தரிசு நிலங்களும் காடுகளும் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. CAL ளாக மாற்ற
- ஜமீன்தார்கள் ஆங்கிலேயரின் நம்பிக்கைக்குரியவர்களாக மாறினர்.
- இத்திட்டம் நிலையான வருவாயை ஆங்கிலேய அரசுக்கு அளித்தது.
குறைகள்:
- மக்களுக்கும் அரசுக்கும் நேரடி தொடர்பு இல்லை.
- விவசாயிகள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
- ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும் மக்கள் நலனில் அக்கறை இன்றி செயல்பட்டனர்.
- வங்காளத்தில் பல பகுதிகளில் மக்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டன.