நெடுநல்வாடை – நக்கீரர்

  • பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல்
  • தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும் போர்ப் பாசறையிலிருக்கும்
  • தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதை கூறிகிறது.
  • முல்லை நில வாழ்வில் கூதிர்ப்பருவம் (மழையும் குளிரும்) ஏற்படுத்தும் மாற்றம்.
நெடுநல்வாடை
  • பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை
  • நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்டது. நெடுநல்வாடை ஆசிரியப்பாவால் இயற்றப்படைது.
  • நெடுநல்வாடை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • நெடுநல்வாடைப் பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்குகிறது.
  • தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடு-நல்-வாடை எனும் பெயர் பெற்றது.

திணை – வாகை திணை.

துறை  – கூதிர்ப்பாசறை.

வாகை திணை
  • அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகை பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை.
கூதிர்ப்பாசறை
  • போர் செய்ய சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு கூதிர்ப்பாசறை
பாடல்-(1-12)

‘வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா

வானம் புதுப்பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் ஏறுடை

இனநிரை வேறுபுலம் பரப்பிப்

புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ

மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க

மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக்

கறவை கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக் குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்.

பா வகை : நேரிசை ஆசிரியப்பா

பாடலின் பொருள்
  • தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
  • பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழந்தன.
  • பசுக்களை பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன.
  • மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.
சொல்லும் பொருளும்
  • புதுப்பெயல்  – புதுமழை
  • ஆர்கலி  – வெள்ளம்
  • கொடுங்கோல்  – வளைந்த கோல்
  • புலம்பு – தனிமை
  • கண்ணி – தலையில் சூடும் மாலை
  • கவுள் – கன்னம்
  • மா – விலங்கு

முந்தைய ஆண்டு வினாக்கள்

கீழ்க்காணும் நூல்களில் எட்டுத்தொகையில் அடங்காத நூல் எது?
(A) அகநானூறு
(B) கலித்தொகை
(C) ஐங்குறு நூறு
(D) நெடுநல்வாடை

இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்
(A) அகத்தியர்
(B) நக்கீரர்
(C) தொல்காப்பியர்
(D) பூதஞ்சேந்தனார்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!