- பணமதிப்பு நீக்கம் என்பது அரசின் சட்டபூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பை செல்லாது என அறிவிக்கும் செயலாகும்.
- இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலான காகிதப்பணம் மதிப்பு நீக்கப்பட அவ்வாறு மதிப்பு நீக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பில் 99 சதவிகிதம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது.
இந்தியாவில் பணமதிப்பு நீக்கத்தின் வரலாறு:
- முதல் முறை 1946 -ரூ.1000, 10000
- இரண்டாவது முறை 1978 – ரூ.1000, 5000, 10000
- மூன்றாவது முறை (8 நவம்பர் 2016) – ரூ.500, 1000
பிலிப்ஸ் வளைவு: ஒரு பொருளாதாரத்தில் வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கான உறவு பிலிப்ஸ் வளைவு காட்டுகிறது.