கலங்கரை விளக்கம்
பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்
ஆற்றுப்படை இலக்கியம்
- வள்ளல் ஒருவரிடம் பரிசுப்பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசுப்பெற பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.
- ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தரை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.
- ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை பண்பை விளக்கும் இலக்கியங்களாக இருக்கின்றன.
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
- கடியலூர் உருத்திரங் கண்ணனார் சங்ககாலப் புலவர்.
- கடியலூர் உருத்திரங் கண்ணனார் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
- கடியலூர் உருத்திரங் கண்ணனார் பத்துப்பாட்டில் இயற்றியுள்ள நூல்கள் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
பெரும்பாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்தொண்டைமான் இளந்தினரயன்.
பாடல் – 346 – 351 வரை
வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை
– கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடலின் பொருள்
- கலங்கரை விளக்கானது வானம் கீழே விழுந்துவிடாமல் தொங்கிக் கொண்டிருக்கும் தூணை போலத் தோற்றமளிக்கிறது
- ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது
- வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது.
- அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைக்கிறது.
சொல்லும் பொருளும்
- மதலை – தூண்
- வேயா மாடம் – சாந்து பூசப்பட்ட மாடம்
- உரவு நீர் – பெருநீர் பரப்பு
- கரையும் – அழைக்கும்
- சென்னி – உச்சி
- ஞெகிழி – தீச்சுடர்
- அழுவம் – கடல்
முந்தைய ஆண்டு வினாக்கள்
தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நூலை இயற்றியவர்
(A) கபிலர்
(B) நக்கீரர்
(C) கடியலூர் உருத்திரங் கண்ணனார்
(D) நப்பூதனார்
(E) விடை தெரியவில்லை
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————