மண்டல குழுக்கள்
- மண்டல குழுக்கள் மாநிலங்களில் மறுசீரமைப்புக் குழு 1956 ம் ஆண்டு சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டன.
- மொழிவாரியாக மாநிலங்கள் உருவான போது மண்டல குழுக்களும் உருவாயின.
- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு மண்டல குழுக்களின் நோக்கம் கூட்டுறவு கூட்டாட்சி வழக்கத்தை வளர்ப்பது என்றார்.
- ஆரம்பத்தில் ஐந்து மண்டலம் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன.
- 1973ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு மண்டல குழு உருவாக்கப்பட்டது.
- தற்பொழுது ஆறு மண்டல குழுக்கள் இயங்குகின்றன.
- வடக்கு மண்டல குழு
- தெற்கு மண்டல குழு
- கிழக்கு மண்டல குழு
- மேற்கு மண்டல குழு
- மத்திய மண்டல குழு
- வட கிழக்கு மண்டல குழு
- மத்திய உள்துறை அமைச்சர் எல்லா மண்டல குழுக்களின் பொது தலைவராக உள்ளார்.
- மேலும் ஒவ்வொரு மண்டல குழுவிலும் ஒவ்வொரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்களும் ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நிர்வாக தலைவரும் உறுப்பினராக இருப்பார்கள்.
- மண்டலங்களில் உள்ள மாநிலங்களில் இடையே எவ்வாறு ஒத்துழைப்பை உருவாக்கி வளர்ப்பது என்று மண்டல குழுக்கள் பரிந்துரை வழங்கும்.
- பொருளாதார ,சமூக திட்டமிடல், எல்லைப் பிரச்சினைகள், போக்குவரத்து போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்க மண்டல குழுக்கள் செயல்படும்.