மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்

மதுரைக்காஞ்சி

  • பத்துபாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி
  • காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.
  • மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.
  • மதுரைக்காஞ்சியைப் ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’ என சிறப்பித்துக் கூறுவர்.
  • மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.
  • மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் தலையாங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

மாங்குடி மருதனார்

  • மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
  • மாங்குடி மருதனார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
  • மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் பதின்மூன்று (13) பாடல்களைப் பாடியுள்ளார்.

மதுரை நகர்

  • மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள பதினெண் மேற்கணக்கு நூல்களுள், முதன்மையானது மதுரைக்காஞ்சி
  • மதுரை மாநகர் மக்களின் வாழ்விடம். கோட்டை கொத்தளம், மதுரை நகரில் நிகழும் திருவிழாக்கள், பலவகைப் பள்ளிகள், நாற்பெருங்குழு, அந்தி வணிகம் ஆகிய காட்சிகள் மதுரைக்காஞ்சி நூலில் கவித்துவமாய் விரிந்துள்ளன.
  • காலை தொடங்கி மறுநாள் விடியல் வரையில் நகரத்தைச் சுற்றிவந்து கண்ணுற்றதை முறைப்படுத்திக் கூறுவது போன்ற வருணனைப் பாடல் அமைந்த நூல் மதுரைக்காஞ்சி.
  • தமிழ்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம் மதுரை.
  • 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட உலகின் தொன்மை நகரங்களில் ஒன்று மதுரை.
  • மதுரை நகரத்தில் இயலும் இசையும் நாடகமும் பொங்கிப் பெருகின.

மதுரையில் வனவிலங்குச் சரணாலையம்

  • “பொறிமயிர் வாரணம் டுறை வயமாப் புலியொடு குழும” – மதுலரக்காஞ்சி (673-677 அடிகள்)
  • மதுரையில் வனவிலங்குச் சரணாலையம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் பாடல் மூலம் அறியலாம் என பத்துபாட்டு ஆராய்ச்சி நூலில் மா. இராசமாணிக்கனார் குறிப்பிட்டுள்ளார்.

மதுரைக்காஞ்சி பாடலின் சுருக்கம்

  • மண்வரை ஆழ்ந்த தெளிந்த அகழி, விண்ணை முட்டும் கற்படை மதில்கள்.
  • தொன்மை உடைய வலிமை மிக்க தெய்வத் தன்மை பொருந்திய நெடுவாசல்
  • பூசிய நெய்யால் கறுத்த கதவுகள், முகில்கள் உலவும் மலையொத்த மாடம்,
  • வற்றாத வையை போல் மக்கள் செல்லும் வாயில்.
  • மாடம் கூடம் மண்டபம் எனப் பல வகை பெற எழுந்து வானம் மூழ்கி தென்றல் வீசும் சாளர இல்லம்.
  • ஆற்றைப் போன்ற அகல்நெடும் தெருவில் பலமொழி பேசுவோர் எழுப்பும் பேச்சொலி.
  • பெருங்காற்று புகுந்த கடலொலி போல விழாவின் நிகழ்வுகள் அறையும் முரசு,
  • நீர் குடைந்தது போல் கருவிகளின் இன்னிசை, கேட்டோர் ஆடும் ஆரவார ஓசை.
  • ஓவியம் போன்ற இரு பெரும் கடைத் தெருக்கள்.

பெருகுவள மதுரைக்காஞ்சி

பாடல்-351-365

  • மதுரை மாநகர் மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின் விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை * *
  • தொல்வலி நிலைஇய, அணங்குடை நெடுநிலை நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின் **
  • மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு வையை அன்ன வழக்குடை வாயில் *
  • வகை பெற எழுந்து வானம் மூழ்கி சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல் * *
  • ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில் பல்வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப
  • மாகால் எடுத்த முந்நீர் போல முழங்கிசை
  • நன்பணை அறைவனர் நுவல, கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழிசை
  • மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து**

                                           –மாங்குடி மருதனார்

பாடலின் பொருள்

  • மதுரை மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது. பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது
  • பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது.
  • அவ்வாயில் நெய் பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளை உடையது.
  • மேகங்கள் உலாவும் மலை போல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன.
  • இடைவிடாது ஓடுகின்ற வையை ஆற்றைப் போல மக்கள் எப்போதும் வாயில்கள் வழிச் செல்கின்றனர்.
  • மண்டபம், கூடம், அடுக்களை எனப் பல்வேறு பிரிவுகளைக்கொண்டு வான் வரை ஓங்கிய தென்றல் காற்று இசைக்கும் பல சாளரங்களையுடைய நல்ல
  • இல்லங்கள் உள்ளன.
  • ஆறு போன்ற அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன.
  • விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கிறது
  • இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை, நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும் தன்மைபோல எழுகிறது.
  • அதனைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர்.
  • பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.

 சொல்லும் பொருளும்

  • புரிசை – மதில்
  • சில்காற்று – தென்றல்
  • மாகால் – பெருங்காற்று
  • பணை – முரசு
  • ஓவு – ஓவியம்
  • அணங்கு – தெய்வம்
  • புழை – சாளரம்
  • முந்நீர் – கடல்
  • கயம் – நீர் நிலை
  • நியமம் – அங்காடி

முந்தைய ஆண்டு வினாக்கள்

பத்துப்பாட்டில் பாண்டிய  நெடுஞ்செழியனை தலைவனாக  கொண்டு பாடப்பட்ட நூல் எது
(A) திருமுருகாற்றுபடை – மதுரைகாஞ்சி
(B) மலைபடுகடாம் – பட்டினப்பாலை
(C) நெடுநெல்வாடை – மதுரைகாஞ்சி
(D) முல்லைப்பாட்டு – குறிஞ்சிப்பாட்டு

ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நூல்கள் எழுதுக
(A) பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு
(B) குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து
(C) மதுரைக் காஞ்சி, முல்லைப்பாட்டு
(D) மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை

“ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்” – இத்தொடர் இடம்பெற்ற நூல்
(A) புறநானூறு
(B) பட்டினப்பாலை
(C) கலித்தொகை
(D) மதுரைக் காஞ்சி

‘எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி’ என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்
(A) குற்றாலக் குறவஞ்சி
(B) முல்லைப் பாட்டு
(C) மதுரைக் காஞ்சி
(D) திருமுருகாற்றுப்படை

“கண்ணுள் வினைஞர்” என மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரால் பாராட்டப்பெறுபவர்கள்
(A) ஓவியக் கலைஞர்கள்
(B) சிற்பக் கலைஞர்கள்
(C) கட்டடக் கலைஞர்கள்
(D) இசைக் கலைஞர்கள்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!