குப்த அரச வம்சம் நிறுவப்படல்
- குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீ குப்தர்.
- நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் ஸ்ரீ குப்தர். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார்.
- கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.
- கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ.319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார்.
- கடோத்கஜர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார்.
- சந்திரகுப்தர் – மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார்.
முதலாம் சந்திரகுப்தர் (பொ.ஆ.319 -335)
- குப்த வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரான முதலாம் சந்திர குப்தர் குமாரதேவி என்ற லிச்சாவி இளவரசியை மணந்தார்.
- சந்திரகுப்தரால் வெளியிடப்பட்ட நாணயங்களில் சந்திரகுப்தர், குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன.
- ‘லிச்சாவையா‘ என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.
சமுத்திரகுப்தர் (பொ.ஆ.335 – 375)
- பொ.ஆ.335 இல் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக நியமித்தார்.
- சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ‘ஹரிசேனர்‘ இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.
- சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று அலகாபாத் தூண் கல்வெட்டாகும்.
அவரது படையெடுப்பின் மூன்று நிலைகள் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன.
- வடஇந்திய ஆட்சியாளருக்கு எதிராக மேற்கொண்டவை
- தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான புகழ்மிக்க “தட்சிணபாதா” படையெடுப்பு.
- வடஇந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான இரண்டாவது படையெடுப்பு.
- இராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய அவர் அசுவமேத யாகம் நடத்தினார்.
- இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி, கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரியுள்ளார்.
- சமுத்திரகுப்தர் அறிஞர்களையும், ஹரிசேனர் போன்ற கவிஞர்களையும் ஆதரித்தார். இதன் மூலம் சமஸ்கிருத இலக்கியத்தை வளர்ப்பதில் பங்காற்றினார்.
- வைணவத்தை அவர் தீவிரமாகப் பின்பற்றினார், என்றாலும் வசுபந்து என்ற மாபெரும் பௌத்த அறிஞரையும் ஆதரித்தார்.
- கவிதை, இசைப் பிரியரான இவருக்குக் “கவிராஜா” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- குப்தர் நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
பிரசஸ்தி / மெய்க்கீர்த்தி
- பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் ‘புகழ்வதாகும்’.
குப்த அரசவம்சம் ஒருங்கிணைக்கப்படல்
- தென்னிந்தியாவில் பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.
- தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார்.
- சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார்.