மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)
- HDI என்பதை பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பொருளியல் அறிஞர் மஹபூப் உல் ஹக் (Mahbul ul Haq) என்பவரும், இந்தியாவைச் சேர்ந்த அமர்த்தியா குமார்சென் அவர்களும் 1990ல் மேம்படுத்தினர்.
- இதனை ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டம் (UNDP) வெளியிட்டது.
- வாழ்நாள் (ஆயுட்காலம்) என்பது பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பின் மூலம் கணக்கிடப்படுகிறது.
- கல்வி தகுதி
- வாழ்க்கைத்தரம் வாங்கும் சக்தியின் அடிப்படையிலான தனிநபர் வருமானத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
- மனித மேம்பாட்டுக் குறியீட்டுக்கான கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது என்று பிஸ்வஜித் குஹா (Biswajeet Guha) கூறியுள்ளார்.
- அவர் HDI1, HDI2, HDI3 மற்றும் HDI4 என்ற நான்கு விதமான மனித மேம்பாட்டுக் குறியீடுகளை உருவாக்கியுள்ளார்.
- India Human Development Index 2021- 2022
- Rank – 132/191
- Category- Medium human development
- HDI Value – 0.633
- Life expectancy at birth (SDG- 3) – 67.2 years
செய்திறன் குறியீட்டெண் (PQLI) – Physical Quality of Life Index
- செய்திறன் குறியீட்டெண்ணை (PQLI) மோரிஸ் டி. மோரிஸ் (MORRIS DMORRIS) உருவாக்கினார்.
- இது ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரத்தினை அளவிடப் பயன்படுகிறது.
- இதற்காக அவர் எதிர்பார்ப்பு ஆயுட்காலம், குழந்தை இறப்பு வீதம் மற்றும் எழுத்தறிவு வீதம் போன்ற மூன்று குறியீடுகளைப் பயன்படுத்தினார்.
- ஒவ்வொரு குறியீட்டெண்ணின் அளவும் 1 லிருந்து 100 வரையிலான எண்களுக்குள் இருக்கும். எண் 1 என்பது ஒரு நாட்டின் மோசமான செயல்பாட்டைக் குறிக்கும் 100 என்பது மிகச்சிறப்பான செயல்பாட்டைக் குறிக்கும்.
HDI VS PQLI
- HDI யில் வருமானம் சேர்க்கப்படுகிறது.
- POLI லிருந்து வருமானம் நீக்கப்படுகிறது.
- உடல் மற்றும் பணம் சார்ந்த மேம்பாட்டை HDI குறிப்பிடுகிறது.
- PQLI உடல் சார்ந்த மேம்பாட்டை மட்டுமே குறிக்கிறது.
மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு (GNHI)
- மொத்த நாட்டு மகிழ்ச்சி என்ற தொடர் 1972ம் ஆண்டு பூடான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே–சிங்யே–வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது.
மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)
- அது ஒரு மக்கள் தொகை கூட்டு மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை அளவிடப் பயன்படும் குறியீட்டை உள்ளடக்கியது.
- GNH என்பது பூட்டான் அரசியலமைப்பு 18 ஜூலை 2008ல் சட்ட பூர்வமாக்கி, பூட்டான் அரசு அமைத்துள்ளது.
GNH யின் 4 தூண்களாக,
- நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- கலாச்சாரத்தை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் மற்றும்
- நல்ல ஆட்சி
- உளவியல் நலன், உடல் நலம், நேரம் பயன்பாடு, கல்வி, கலாச்சார பன்முகத் தன்மை மற்றும் பின்னடைவு, நல்ல ஆட்சி, சமூகத்தின் உயர்வு, சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை மற்றும் பின்னடைவு மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவை GNH-யின் 9 கலங்களாக கருதப்படுகிறது.