மொஹஞ்சதாரோ – பெருங்குளம்

பெருங்குளம்

  • இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும்.
  • குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதை வடக்குப்பக்கத்திலும் தெற்குப்பக்கத்திலும் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.
  • குளத்தின் தரைப்பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக நீலக்கீல் (Bitumen) என்ற பசையால் பூசப்பட்டிருந்தது.
  • சில கட்டுமான அமைப்புகள் தானியக்கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன.
  • வடபுறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தானியக் களஞ்சியம்

  • இது 168 அடி நீளமும், 135 அடி அகலமும் உடையது.
  • இதன் சுவர்கள் 52 அடி உயரமும், 9 அடி கனமும் உடையவை.
  • தள வெடிப்புகளில் கோதுமை, பார்லி, தினைவகைகள், எள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறிக் காணப்பட்டன.
  • செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.

மாபெரும் கட்டடங்கள்

  • மொஹஞ்சதாரோவில் இருந்த இன்னொரு மிகப்பெரும் பொதுக் கட்டடம், கூட்ட அரங்கு ஆகும்.
  • இது 20 தூண்கள் 4 வரிசைகளை கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!