லோடி வம்சம் (பொ.ஆ.1451-1526)

  • லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் பஹ்லுல் லோடி (1451 – 1489) ஆவார்.
  • பஹ்லுல் லோடி அரியணையில் அமரவில்லை. உயர்குடியினரின் ஆதரவைப் பெறுவதற்காகவே, உயர்குடியினருடன் கம்பளத்தில் அமர்ந்த ஆட்சி செய்தார்.

சிக்கந்தர் லோடி(1489-1517)

  • பஹ்லுல் லோடியின் மகன் சிக்கந்தர் லோடி 1504 இல் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றினார்.
  • சிக்கந்தர் லோடி கலை மற்றும் கற்றலை ஆதரித்தார்.
  • ஷெனாய் இசையை இவர் மிகவும் விரும்பினார்.
  • லஹ்ஜட்சிக்கந்தர் ஷாஹி என்ற இசைத்தொகுப்பு இவர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

இப்ராஹிம் லோடி (பொ..1517 – 1526)

  • தௌலத்கான் லோடியின் மகன் தில்வர்கான் லோடியை இப்ராஹிம் லோடி கொடுமைப்படுத்தினார்.
  • தௌலத்கான் லோடி, காபூல் மன்னர் பாபரை உதவிக்கு அழைத்தார்.
  • கடைசி லோடி ஆட்சியாளரான இப்ராஹிம் லோடி, முகலாய வம்ச ஆட்சியை நிறுவிய பாபரிடம் முதலாம் பானிபட் போரில் (1526) தோற்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!