Contents show
வகுப்புவாத கொடை அதன் விளைவுகள்
- வட்டமேஜை மாநாடுகளின் தோல்விக்குப் பிறகு, பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட், அரசியல் சூழலை மேலும் சீர்குலைத்த வகுப்புவாத கொடையை அறிவித்தார்.
- ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1925 இல் நிறுவப்பட்டது மேலும் அதன் தன்னார்வலர்களின் எண்ணிக்கை 1,00,000 ஆக உயர்ந்தது.
- கே.பி. ஹெட்கேவார், வி.டி. சாவர்க்கர் மற்றும் எம்.எஸ். கோல்வால்கர் இந்து ராஷ்டிராவின் கருத்தை விரிவாகக் கூற முயன்றனர், ‘ஹிந்துஸ்தானில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்… அவர்கள் வெளிநாட்டினராக இருப்பதை நிறுத்த வேண்டும் அல்லது முற்றிலும் கீழ்ப்படிந்து உரிமைகள் ஏதும் கேட்க்காமல் இந்த இந்து தேசத்தில் இருக்க வேண்டும்” என்று வெளிப்படையாக வாதிட்டனர்.
- வி.டி. சாவர்க்கர், ‘இந்துக்கள் நாமே ஒரு தேசம்’ என்று கூறினார்
- 1934 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் அதன் உறுப்பினர்கள் இந்து மகாசபை அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்வதை தடுத்தாலும், 1938 ஆம் ஆண்டு டிசம்பரில் தான், இந்து மகாசபையில் உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ்க்காரர்களின் அங்கீகாரம் இரத்து செய்யாப்படும் என காங்கிரஸ் காரியக் கமிட்டி அறிவித்தது.
முதல் காங்கிரஸ் அமைச்சரவை
- மகாத்மா காந்தியால் உருவகப்படுத்தப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸின் தேசியவாதம் என்பது ஆர்ய சமாஜ் மற்றும் அலிகார் இயக்கத்தால் எடுத்துக்காட்டப்பட்ட குறுகிய தேசியவாதத்தை நிராகரித்து, பல்வேறு மதங்களைக் கடந்து ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்க பாடுபடுவதாகும்.
- வகுப்புவாதங்களுக்கு ஆதரவு கொண்ட அரசு இருந்தபோதிலும், இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவில் ஒரு மேலாதிக்க அரசியல் சக்தியாக இருந்தது.
- 1937 தேர்தலில் பதினொரு மாகாணங்களில் ஏழில் காங்கிரஸ் வெற்றி பெற்று மற்ற மூன்றில் மிகப்பெரிய மதச்சார்பற்ற வெகுஜன கட்சியாக உருவெடுத்து.
- முஸ்லீம் லீக்கின் தேர்தல் முடிவு படுமோசமாக இருந்தது, முஸ்லிம் வாக்குகளில் 4.8 சதவீதத்தை மட்டுமே அதனால் பெற முடிந்தது.
- ஆனாலும் பிரிட்டிஷ் அரசாங்கம் காங்கிரஸை இந்து அமைப்பாக முத்திரை குத்தி முஸ்லிம்களின் உண்மையான பிரதிநிதியாக முஸ்லிம் லீக்கை முன்னிறுத்தியது.
- 1936-37 தேர்தல்களுக்குப் பிறகு முஸ்லீம் ஆதரவைப் பெற ஜின்னா இஸ்லாம் ஆபத்தில் உள்ளது எனும் உணர்ச்சிகரமான பிரச்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்
விடுதலை நாள் அனுசரிப்பு
- 1939இல் இரண்டாம் உலகப் போர் வெடித்தது, இந்தியாவின் வைஸ்ராய் லின்லித்கோ உடனடியாக இந்தியாவும் போரில் ஈடுபடுவதாக அறிவித்தார்.
- மாகாணங்களில் உள்ள அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு செய்தது.
- முஸ்லீம் லீக் காங்கிரஸ் ஆட்சியின் முடிவை 22 டிசம்பர் 1939 அன்று விடுதலை நாளாகக் கொண்டாடியது.
- அன்று இஸ்லாமியர்களுக்கு எதிரான காங்கிரசின் செயல்பாடுகளுக்கு எதிராக எனக்கூறி முஸ்லீம் லீக் பல்வேறு இடங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியது.
- இந்த சூழ்நிலையில்தான் 1940 மார்ச் 26 அன்று லாகூரில் முஸ்லிம்களுக்கு தனி நாடு கோரி முஸ்லீம் லீக் தனது தீர்மானத்தை நிறைவேற்றியது.
- 1940 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் மேடையில் பாகிஸ்தான் பற்றிய யோசனை வந்தாலும், அது பத்து ஆண்டுகளுக்கு முன்பே கவிஞர்-அறிஞரான முகமது இக்பால் என்பவரால் உருவானது.
- அலகாபாத்தில் (1930) நடைபெற்ற முஸ்லீம் லீக்கின் வருடாந்திர மாநாட்டில், இக்பால் ஒரு ஒருங்கிணைந்த வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசைக் காண விரும்பினார்.
- அதை கேம்பிரிட்ஜ் மாணவர் ரஹ்மத் அலி வெளிப்படுத்தினார்.
- முஸ்லீம் லீக்கின் “இரண்டு தேசக் கோட்பாடு“ கோரிக்கை முதன்முதலில் 1937ல் பம்பாய் முஸ்லீம் லீக் அமர்வில் அதன் தலைவர் சர் வசீர் ஹசனின் உரையிலிருந்து வந்தது.
- அவர், “இந்த பரந்த கண்டத்தில் வசிக்கும் இந்துக்களும் முசல்மான்களும் இரண்டு சமூகங்கள் அல்ல, ஆனால் பல விதங்களில் அவர்களை இரண்டு தனி நாடாக கருதவேண்டியுள்ளது“ கூறினார்
- அப்போது ஜின்னாவோ அல்லது நவாப் ஜஃப்ருல்லா கானோ முஸ்லிம்களுக்கு தனி நாடு உருவாக்குவது நடைமுறை சாத்தியம் என்று கருதவில்லை.
- பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவை விட்டு வெளியேறும் முன், இந்திய ஒன்றியம் மற்றும் பாகிஸ்தானாக நாட்டைப் பிரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று லீக் தீர்மானித்தது.
நேரடி நடவடிக்கை நாள்
- 1940களின் முற்பகுதி முழுவதும் இந்து வகுப்புவாதமும் முஸ்லீம் வகுப்புவாதமும் ஒன்றையொன்று வளர்த்துக்கொண்டன. முஸ்லீம் லீக், 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வெளிப்படையாகப் புறக்கணித்தது.
- 1946 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில், மத்திய சட்டப் பேரவையில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 இடங்களையும், ஒதுக்கப்பட்ட மாகாணங்களில் பெரும்பாலான இடங்களையும் முஸ்லிம் லீக் வென்றது.
- காங்கிரஸ் கட்சி பெரும்பாலான பொது வாக்காளர் இடங்களைத் திரட்டுவதில் வெற்றி பெற்றது, ஆனால் அது பிரிட்டிஷ் இந்தியாவின் முழு மக்களுக்காகவும் பேசுகிறது என்று திறம்பட வலியுறுத்த முடியவில்லை.
- 1946 ஆம் ஆண்டு செயலர் பதிக் லாரன்ஸ், காங்கிரஸ்-முஸ்லிம் லீக் முட்டுக்கட்டையைத் தீர்த்து, பிரிட்டிஷ் அதிகாரத்தை ஒரே இந்திய நிர்வாகத்திற்கு மாற்றும் நம்பிக்கையுடன் மூன்று பேர் கொண்ட அமைச்சரவைக் குழுவை வழிநடத்தினார். கேபினட் மிஷன் திட்டத்தை வரைவதற்கு கிரிப்ஸ் முதன்மையாக பொறுப்பேற்றார்.
- காங்கிரஸ் தலைவர்களைப் போலவே ஜின்னாவும் அமைச்சரவைக் குழுவின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டார்.
- ஆனால் பல வாரங்கள் திரைக்குப் பின்னால் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜூலை 29, 1946 அன்று, முஸ்லிம் லீக் அமைச்சரவை திட்டத்தை நிராகரிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 16 அன்று எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்களை ‘நேரடி நடவடிக்கை தினமாக‘ கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தது.
- கல்கத்தாவில் நான்கு நாட்களாக நடந்த கலவரம் மற்றும் கொலைகள் பயங்கர வன்முறைக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- அதுவரை நாட்டைக் கலங்கடிக்கும் எந்த முயற்சியையும் எதிர்த்த காந்தி, பாகிஸ்தானை உருவாக்கும் முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்க வேண்டியிருந்தது.
- வேவலுக்குப் பிறகு மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்கு வைஸ்ராயாக வந்து பிரிவினைத் திட்டம் மற்றும் அதிகாரப் பரிமாற்றத்தை செயல்படுத்தினார்.
- இறுதியாக மவுண்ட்பேட்டன் திட்டத்தின்படி இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தனி நாடாக மாறியது.