Contents show
வேவல் திட்டம் மற்றும் சிம்லா மாநாடு:
- வேவல் திட்டம் 1945 ஜூன் 14 அன்று அறிவிக்கப்பட்டது.
- வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் இந்துக்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் உள்ள இடைக்கால அரசாங்கத்தை இது வழங்கியது.
- போர் இலாகாவைத் தவிர அனைத்து இலாகாக்களும் இந்திய அமைச்சர்களின் வசம் கொடுக்கப்பட இருந்தன.
- சிம்லா பேச்சுக்காக காங்கிரஸ் தலைவர்களான நேரு, சர்தார் படேல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
- 1945 ஜூன் 25 முதல் ஜூலை 14 வரை நடைபெற்ற சிம்லா மாநாடு தீர்மானம் ஏதுமின்றி முடிந்தது.
- அனைத்து முஸ்லீம் உறுப்பினர்களும் முஸ்லீம் லீக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து முக்கியமான விஷயங்களிலும் அவர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் ஜின்னா கோரினார்.
- எனினும், சிம்லா மாநாட்டில் காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை.
- டெல்லியில் ஏப்ரல் 1946 இல் நடந்த முஸ்லீம் லீக்கின் சட்டசபை உறுப்பினர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் ஒரு ‘இறையாண்மை கொண்ட தனிநாடு என்று வர்ணிக்கப்பட்டது.
- முதன்முறையாக அதன் பூகோள வரையறையையும் வெளிப்படுத்திய முஸ்லீம் லீக் வடகிழக்கில் வங்காளத்தையும், அசாமையும் போன்று வடமேற்கில் பஞ்சாப், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய முஸ்லீம் மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளைச் சுட்டிக்காட்டியது.
- இதை நிராகரித்த காங்கிரஸ் தலைவரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர் சார்ந்த இயக்கம் முழு விடுதலை பெற்ற ஒருங்கிணைந்த இந்தியாவையே ஆதரிக்கும் என்றார்.
- 1946 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான பொது இடங்களை வென்றது மற்றும் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களை முஸ்லிம் லீக் வென்று தனது கோரிக்கைக்கு வலுசேர்த்தது.