இரண்டாம் சந்திரகுப்தர்:
- பொ.ஆ.375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
- தனது சகோதரரான ராமகுப்தருடன் (பொ.ஆ.370-375) வாரிசுரிமைக்குப் போராடி ஆட்சிக்கு வந்தார்.
- விக்ரமாதித்யன் என்றும் அழைக்கப்பட்டார்.
- சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார்.
- தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார்.
- குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது.
- வாகடக இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார்.
- உஜ்ஜயினி ஒரு முக்கிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகராக வளர்ச்சி பெற்றது.
- விக்ரமன், நரேந்திரசந்திரர், சிம்மசந்திரர், நரேந்திரசிம்மர், விக்ரமதேவராஜர், தேவஸ்ரீ, தேவகுப்தன், தேவராஜன், சிம்ஹவிக்ரமன், விக்ரமாதித்யன், சகாரி ஆகியன இவரது வேறு பெயர்களாகும். (இவை நாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.)
- வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தரே.
- இவரது ஆட்சிக்காலத்தில்தான் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது.
விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த நவரத்தினங்கள்:
காளிதாசர் | சமஸ்கிருதப் புலவர் |
ஹரிசேனர் | சமஸ்கிருதப் புலவர் |
அமர சிம்ஹர் | அகராதியியல் ஆசிரியர் |
தன்வந்திரி | மருத்துவர் |
காகபானகர் | சோதிடர் |
சன்கு | கட்டடக் கலை நிபுணர் |
வராகமிகிரர் | வானியல் அறிஞர் |
வராச்சி | இலக்கண ஆசிரியர் (ம) சமஸ்கிருதப் புலவர் |
விட்டல்பட்டர் | மாயவித்தைக்காரர் |
- இவரது ஆட்சிக்காலத்தில்தான் பாஹியான் என்ற பௌத்த அறிஞர் சீனாவிலிருந்து இந்தியா வந்தார்.
- பாஹியான் கங்கைச் சமவெளியை ‘பிராமணர்களின் பூமி‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகியான்
- இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில், சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார்.
- பாகியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
- கடுமையான தண்டனையின்றி நீதி வழங்கப்பட்டது.
- மரணதண்டனை வழங்கப்படவில்லை.
- இரண்டாம் சந்திரகுப்தன் பெயரை அவர் குறிப்பிடவில்லை.