முதலாம் சந்திரகுப்தர் மற்றும் சமுத்திரகுப்தர் – வரலாறு

குப்த அரச வம்சம் நிறுவப்படல்

  • குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீ குப்தர்.
  • நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் ஸ்ரீ குப்தர். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார்.
  • கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.
  • கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ..319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார்.
  • கடோத்கஜர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார்.
  • சந்திரகுப்தர் மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார்.

முதலாம் சந்திரகுப்தர் (பொ..319 -335)

  • குப்த வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளரான முதலாம் சந்திர குப்தர் குமாரதேவி என்ற லிச்சாவி இளவரசியை மணந்தார்.
  • சந்திரகுப்தரால் வெளியிடப்பட்ட நாணயங்களில் சந்திரகுப்தர், குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன.
  • லிச்சாவையா என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரகுப்தர் (பொ..335 – 375)

  • பொ.ஆ.335 இல் முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திரகுப்தரைத் தனது வாரிசாக நியமித்தார்.
  • சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவரான ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி) அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.
  • சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று அலகாபாத் தூண் கல்வெட்டாகும்.

அவரது படையெடுப்பின் மூன்று நிலைகள் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன.

  1. வடஇந்திய ஆட்சியாளருக்கு எதிராக மேற்கொண்டவை
  2. தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான புகழ்மிக்கதட்சிணபாதா” படையெடுப்பு.
  3. வடஇந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான இரண்டாவது படையெடுப்பு.
  • இராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய அவர் அசுவமேத யாகம் நடத்தினார்.
  • இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி, கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரியுள்ளார்.
  • சமுத்திரகுப்தர் அறிஞர்களையும், ஹரிசேனர் போன்ற கவிஞர்களையும் ஆதரித்தார். இதன் மூலம் சமஸ்கிருத இலக்கியத்தை வளர்ப்பதில் பங்காற்றினார்.
  • வைணவத்தை அவர் தீவிரமாகப் பின்பற்றினார், என்றாலும் வசுபந்து என்ற மாபெரும் பௌத்த அறிஞரையும் ஆதரித்தார்.
  • கவிதை, இசைப் பிரியரான இவருக்குக் கவிராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • குப்தர் நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரசஸ்தி / மெய்க்கீர்த்தி

  • பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப்புகழ்வதாகும்’.

குப்த அரசவம்சம் ஒருங்கிணைக்கப்படல்

  • தென்னிந்தியாவில் பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.
  • தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார்.
  • சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!