சமஸ்கிருத இலக்கியம்
- பிராகிருதம் மக்களால் பேசப்படும் மொழியாக இருந்த போதிலும் குப்தர்கள் சமஸ்கிருதத்தை அலுவலக மொழியாகக் கொண்டிருந்தனர்.
சமஸ்கிருத இலக்கணம்
- பாணினி எழுதிய அஷ்டத்யாயி, பதஞ்சலியால் எழுதப்பட்ட மஹாபாஷ்யா ஆகிய படைப்புகளின் அடிப்படையில் குப்தர் காலத்தில் சமஸ்கிருத இலக்கணத்தின் வளர்ச்சி புலப்படுகிறது.
- இக்காலகட்டம் குறிப்பாக அமரசிம்மரால் அமரகோசம் என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
- வங்கத்தைச் சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் சந்திரவியாகரணம் என்ற இலக்கண நூலைப் படைத்தார்.
புராணங்களும், இதிகாசங்களும்
- புராணங்கள் இந்தக் காலத்தில்தான் இயற்றப்பட்டன.
- மஹாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் மெருகேறிச் செம்மையடைந்து தமது இறுதி வடிவினைப் பெற்றன.
- ஆரியபட்டர் தனது நூலான ‘சூரிய சித்தாந்தாவில்‘ சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார்.
பௌத்த இலக்கியம்
- தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலி மொழியில் இருந்தன.
- ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் ஆவர்.
- தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டது.
சமண இலக்கியம்
- சமணர்களின் மதநூல்களும் தொடக்கத்தில் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன.
- சித்தசேன திவாகரா சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டார்.
சமயம் சாரா இலக்கியம்
- சூத்ரகர்(மிருச்சகடிகம்), விசாகதத்தர் (முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்தம்) ஆகியோர் படைப்புகள் வெளியாகின.
- அர்ச்சுனனுக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடைபெற்ற மோதலைக் கூறும் கதையான கிருதார்ஜீன்யம் என்ற நூலைப் படைத்தவர் பாரவி.
- காவியதரிசனம், தசகுமாரசரிதம் ஆகிய நூல்களை தண்டின் எழுதியுள்ளார்.
- குப்தர் காலத்தில்தான் பஞ்சதந்திரக் கதைகள் விஷ்ணு சர்மா என்பவரால் தொகுக்கப்பட்டன.