குப்தர்கால – நிலகுத்தகை முறை:
நிலகுத்தகை வகை | உரிமையின் தன்மை |
நிவி தர்மா | அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம். இம்முறை வடக்கு, மத்திய இந்தியா மற்றும் வங்கத்தில் நிலவியது. |
நிவி தர்ம அக்சயனா | நிரந்தரமான அறக்கட்டளை பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம். |
அப்ரதா தர்மா | வருவாயைப் பயன்படுத்தலாம். ஆனால் அதை பிறருக்குத் தானம் செய்யமுடியாது. நிர்வாக உரிமையும் இல்லை. |
பூமிசித்ராயனா | தரிசு நிலத்தை முதன்முதலாகச் சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை. இந்த நிலத்திற்குக் குத்தகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. |
ஏனைய நிலக்கொடைகள்:
அக்ரஹார மானியம் | பிராமணர்களுக்குத் தரப்படுவது. இது நிரந்தரமானது. பரம்பரையாக வரக்கூடியது; வரி கிடையாது. |
தேவக்கிரஹார மானியம் | கோயில் மராமத்து, வழிபாடு ஆகிய பணிகளுக்காகப் பிராமணர்கள், வணிகர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் நில மானியம். |
சமயச் சார்பற்ற மானியம் | குப்தர்களுக்குக் கீழிருந்த நிலப்பிரபுக்களுக்குத் தரப்பட்ட மானியம். |
பல்வேறு வரிகளின் பட்டியல்:
வரி | அதன் தன்மை |
பாகா | விளைச்சலில் அரசன் பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்காகும். |
போகா | அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள், விறகு,பூக்கள் போன்றவை. |
கரா
| கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒரு வரி (இது வருடாந்திர நிலவரியின் ஒரு பகுதியல்ல) |
பலி
| ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வரியாக இருந்து. பின்னர் கட்டாய வரியாக மாற்றப்பட்டது. இது ஒரு ஒடுக்குமுறை வரி. |
உதியங்கா | காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம். அல்லது நீர் வரியாகவும் இருக்கலாம். எனினும்,இது ஒரு கூடுதல் வரிதான். |
உபரிகரா
| இதுவும் ஒரு கூடுதல் வரிதான். இது எதற்காக வசூலிக்கப்பட்டது என்பது குறித்து அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களைத் தருகின்றனர். |
ஹிரண்யா | தங்க நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி என்பது நேரடிப் பொருள். நடைமுறையில் இது சில குறிப்பிட்ட தானியங்களின் விளைச்சலில் ஒரு பங்கினை, அரசின் பங்காகப் பொருளாகவே அளிப்பதாகும். |
வாத -பூதா | காற்றுக்கும் ஆவிகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள் |
ஹலிவகரா | கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு உழவரும் கட்ட வேண்டிய கலப்பை வரி |
சுல்கா | வர்த்தகர்கள் நகரத்திற்கோ துறைமுகத்திற்கோ கொண்டுவரும் வணிகச் சரக்குகளில் அரசருக்கான பங்கு. இதைச் சுங்க,நுழைவு வரிகளுக்கு ஒப்பிடலாம். |
கிளிப்தா, உபகிளிப்தா | நிலப்பதிவின் போது விதிக்கப்படும் விற்பனை வரி |