சீவக சிந்தாமணி

 • சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
 • சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் திருத்தக்கதேவர்.
 • விருத்தப்பாக்களால் இயற்பப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி.
 • ”மண நூல்” எனவும் சீவகசிந்தாமணி அழைக்கபடுகிறது.
 • ‘இலம்பகம்’ என்னும் உட்பிரிவுகளைக் கொண்டது சீவகசிந்தாமணி.
 • சீவகசிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டுள்ளது.
 • சீவகனைத் தலைவனாகக் கொண்டு தோன்றி காப்பியம் சீவகசிந்தாமணி.
 • இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் என்பதே சீவகசிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்தாகும்.
 • சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகத் ஏமாங்கத நாட்டு வளம் என்னும் பகுதி பாடமாக அமைந்துள்ளது.

திருத்தக்கதேவர்

 • சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் திருத்தக்கத்தேவர்.
 • திருத்தக்கத்தேவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்,
 • திருத்தக்கத்தேவரது காலம் (ஒன்பதாம்) 9ம் நூற்றாண்டு.
 • சீவகசிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ‘நரி விருத்தம்’ என்னும் நூலை திருத்தக்கத்தேவர் இயற்றினார்.
 • இன்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் திருத்தக்கத்தேவர் சீவகசிந்தாமணி காப்பியத்தை இயற்றினார்.

பார் போற்றும் ஏமாங்கதம்

பாடல் – 31

காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடை கீறி*

வருக்கை போழ்ந்து தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்

ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே! *

சொல்லும் பொருளும்

 • தெங்கு – தேங்காய்
 • நெற்றி – உச்சி
 • வருக்கை – பலாப்பழம்
 • இசை – புகழ்

பாடலின் பொருள்

தென்னை மரத்திலிருந்து நன்றாக முற்றிய தேங்காய் விழுகிறது

அது விழுகின்ற வேகத்தில், பாக்கு மரத்தின் உச்சியிலுள்ள சுவைமிக்க தேனாடையைக் கிழித்து.

பலாப்பழத்தினை பிளந்து, மகாங்கனியைச் சிதறவைத்து, வாழைப் பழத்தினை உதிர்கவும் செய்தது.

இத்தகு வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் பரவியிருந்தது.

வாரி வழங்கும் வள்ளல்

பாடல் – 36 * * *

வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை

கொண்ட கொழுநிதிக் குப்பையை

உள்ளம் இல்லவர்க்கு ஊர்தொறும் உய்த்து உராய் வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே. ***

பாடலின் பொருள்

இரந்து கேட்பவர்க்கு இல்லையென்னாது வாரி

வழங்கும் செல்வர்களைப் போன்றது வெள்ளம்

அது உயர்ந்த மலையிலிருந்து செல்வக்குவியலைச்

சேர்த்துக்கொண்டு வந்து,

ஊக்கமில்லாத மக்களுக்கு ஊர் தோறும் வழங்கும் வகையில் நாட்டினுள் விரைந்து பாய்கிறது.

சொல்லும் பொருளும்

 • மால் வரை – பெரிய மலை
 • கொழு நிதி – திரண்ட நிதி
 • மடுத்து – பாய்ந்து

மணம் கமழும் கழனி

பாடல் – 44

நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம்*

செறி மருப்பு ஏற்றினம் சிலம்பப் பண் *

உறீஇப் பொறி வரி வராலினம் இரியப் புக்குடன்*

வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே.

சொல்லும் பொருளும்

 • மருப்பு              – கொம்பு
 • செறி                   – சிறந்த
 • இரிய                 – ஓட
 • வெறி                 – மணம்
 • கழனி                – வயல்

பாடலின் பொருள்

அழகான கொம்புகளை உடைய ஆண் எருமைகளும் நேரான கொம்புகளை உடைய வலிமையான எருதுகளும் போரொலி எழுப்புகின்றன.

அவ்வொலி கேட்டுப் புள்ளிகளும் வரிகளும் உடைய வரால் மீன்கள் களைந்து ஓடுகின்றன.

அத்தகு மணம் வீசும் வயலில் உழவர் கூட்டம் வெள்ளம்  போல நிறைந்திருந்தது.

தலைவணங்கி விளைந்த நெற்பயிர்

பாடல் –53

சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்

மெல்லவே கரு இருந்து ஈன்று

மேலலார் செல்வம் போலத் நிறு வித் நேர்ந்த நூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே***

சொல்லும் பொருளும்

 • சூல்-கரு

பாடலின் பொருள்

கருகொண்ட பச்சைப் பாம்பு போல் நெற்பயிர்கள் தேற்றம் கொண்டுள்ளன. நெற்பயிர்கள் கதிர்விட்டு நிமிர்ந்து நிற்பது, செல்வம் பெற்ற பக்குவம் இல்லாதவர் தலை நிமிர்ந்து நிற்பது போல் உள்ளது.

அப்யிர்கள் முற்றியவுடன் நெற்கதிர்கள் சாய்ந்திருப்பது, தெளிந்த நூலை கற்ற நல்லவர்களின் பணிவைப்போல உள்ளது.

எல்லாம் ஆயிரம் ஆயிரமாய்

பாடல் – 76 * *

அடிசில் வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்

கொடியனார் செய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம்

மடிவுஇல் கம்மியர்க்கோடும் மங்கலமும் ஆயிரம்

ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பலே. **

சொல்லும் பொருளும்

 • அடிசில் – சோறு
 • மடிவு – சோம்பல்
 • கொடியனார் – மகளிர்
 • ஒடிவு – தவிர்தல்

பாடலின் பொருள்

வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டிலுள்ள ஊர்களில்

காலந்தோறும் கிடைக்கும் உணவு வகைகள் ஆயிரம், அறச்சாலைகள் ஆயிரம்

அங்கே  மகளிர் ஒப்பனை செய்துகொள்ள மணிமாடங்கள் ஆயிரம்

மேலும் செய்தொழிலில் சிறிதும் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரம், அதனால் நிகழும் திருமணங்களும் ஆயிரம்.

ஏமாங்கத நாட்டில் தவிர்தலின்றி காவல் செய்யும் காவலரும் ஆயிரம்

நாடுகள் சூழ்ந்து ஏமாங்கத நாடு

பாடல்-77**

நற்றவம் செய்வோர்க்கு இடம் தவம் செய்வோர்க்கு அஃது இடம்

நற்பொருள் செய்வோர்க்கு இடம் பொருள் செய்வோர்க்கு இடம்  அஃது இடம்

கொற்ற(ம்) இன்பம் விழவிப்போன் விண் உவந்து வீழ்ந்தென மற்ற நாடு வட்டமாக வைகுமற்ற நாடரோ.

சொல்லும் பொருளும்

 • நற்றவம் – பெருந்தவம்
 • வட்டம் – எல்லை
 • கொற்றம் – வெற்றி

பாடலின் பொருள்

 • ஏமாங்கத நாடு, உண்மையான தவம் புரிவோர்க்கும் இல்லறம் நடத்துவோர்க்கும் இனிய இடமாகும்.
 • நிலையான பொருளைத் தேடுவோர்க்கும் நிலையில்லாத
 • பொருட்செல்வத்தை தேடுவோர்க்கும் உகந்த இடமாகும்.
 • நாடுகள் சூழ்ந்து இருக்கும் எழில்மிகு சிறப்புப் பொருந்திய ஏமாங்கத நாடு வானுலகம் வழங்கும் இன்பம், உலகோர் ஏற்கும் வகையில் தாழ்ந்து மண்ணுலகிற்கு இறங்கி வந்தது போல திகழ்ந்தது.

சீவகசிந்தாமணி – இலம்பகங்கள் – 13

 1. நாமகள் இலம்பகம்
 2. கோவிந்தையார் இலம்பகம்
 3. காந்தருவ தத்தை இலம்பகம்
 4. குணமாலை இலம்பகம்
 5. பதுமை இலம்பகம்
 6. கேமசரி இலம்பகம்
 7. கனகமாலை இலம்பகம்
 8. விமலை இலம்பகம்
 9. சுரமஞ்சி இலம்பகம்
 10. மண்மகள் இலம்பகம்
 11. பூமகள் இலம்பகம்
 12. இலக்கணை இலம்பகம்
 13. முத்தி இலம்பகம்

முந்தைய ஆண்டு வினாக்கள்

சீவக சிந்தாமணியின் உட்பிரிவு எந்தச் சொல்லால் அழைக்கப்படுகிறது?
(A) காதை
(B) படலம்
(C) காண்டம்
(D) இலம்பகம்
(E) விடை தெரியவில்லை

‘மணநூல்’ என அழைக்கப்பெறும் நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) சீவக சிந்தாமணி
(D) குண்டலகேசி

சிந்தாமணியே என்று அழைக்கப்பட்டவர்
(A) நபுலன்
(B) சீதத்தன்
(C) சீவகன்
(D) கலுழவேகன்

சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
(A) பேராசிரியர்
(B) அடியார்க்கு நல்லார்
(C) நச்சினார்க்கினியர்
(D) ந.மு.வேங்கடசாமி

‘சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே’ -இடம்பெற்றுள்ள காப்பியம்
(A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) சீவகசிந்தாமணி
(D) குண்டலகேசி

‘மண நூல்’ இந்நூலின் ஆசிரியர் யார்?
(A) இளங்கோவடிகள்
(B) சீத்தலைச் சாத்தனார்
(C) திருத்தக்க தேவர்
(D) திருவள்ளுவர்

பொருந்தா இணையைத் தேர்வு செய்க.
(A) திருத்தக்கத்தேவர் – வளையாபதி
(B) இளங்கோவடிகள் – சிலப்பதிகாரம்
(C) நாதகுத்தனார் – குண்டலகேசி
(D) சீத்தலைச்சாத்தனார் – மணிமேகலை

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!