தரவு மேலாண்மை என்றால் என்ன? தரவு மேலாண்மையின் பயன்களை குறிப்பிடுக.

தரவு மேலாண்மை

 • தரவு மேலாண்மை என்பது, ஐ.டீ.இ.எஸ். சேவையில் ஒரு வகை.
 • தரவு மேலாண்மை என்பது பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்படும் தரவுகளைத் திரட்டுவது அவற்றைக் கணிப்பொறியில் சேமிப்பது, பின் செயலாக்குவது ஆகியப் பணிகளை உள்ளடக்கியதாகும்.
 • மரபுவழி, தரவுத் செயலாக்கச் சேவை என்பது, கையெழுத்தில் நிரப்பப்பட்ட படிவங்களில் உள்ள தரவுகளை கணிப்பொறியில் பதிவது, படங்களையும், அச்சிட்ட வெளியீடுகளையும் கணிப்பொறியில் ஏற்றி அவை அனைத்தையும் ஒன்றாக்கித் தரவுத் தளங்களை உருவாக்குவது – ஆகியப் பணிகளை உள்ளடக்கியதாகும்.
 • ஆனால், பல்லூடகத் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் வருகையால், தரவுத் தளங்களில் அச்சிட்ட ஆவணங்களை மட்டுமின்றி படங்கள், ஒலி மற்றும் நிகழ்படத் தகவல்களையும் சேமிக்க முடியும்.
 • அதே போல, தகவல் வெளியீட்டு ஊடகங்களிலும் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வழங்கிக் கணிப்பொறிகளில் சேமித்து நிறுவனங்களில் செயல்திறனுடன் லாபம் தரத்தக்க வகையில்
  வைக்கப்பட்டுள்ள தரவுத்தளங்களைப் பலரும் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
 • அச்சிட்ட பதிப்புகளிலும் மற்றும் குறுவட்டுகளிலும் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இணையம் வழி பெறப்படும் வினவல்களின் அடிப்படையில் இந்த வெளியீடுகள் அமைகின்றன.
 • தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தரவு மேலாண்மை முக்கிய இடம் வகிக்கிறது.
 • இந்த வகைப்பாட்டில் வழங்கப்படும் ஐ.டீ.இ.எஸ். சேவைகள் வருமாறு:
  • ஆஸ்க்கி உரைவடிவில் தகவல்களைத் தரவுத்தளத்தில் பதிவேற்றல்
  • அச்சிட்ட உரை ஆவணங்களைக் கணிப்பொறி ஆவணமாக மாற்றிச் செயலாக்குதல் தேவைகேற்ற வகையில் அறிக்கை தயாரித்தல்
  • தரவுகள் உள்ளீடு தரவுகளைத் திருத்தியமைத்தல்
  • ஆவண உருவாக்கம்
  • படிவங்களை படிமங்களாகக் குறுவட்டுகளில் கையெழுத்து, அச்செழுத்து, காந்த எழுத்து, பட்டைக்குறிமுறை பதித்தல்.
  • இதுபோன்ற எந்த வடிவத்தில் இருக்கும் தகவல்களையும் கணிப்பொறித் தகவலாக மாற்றிச் சேமித்தல் படங்களை வருடிச் சேமித்தல்
   படங்களை உள்ளீடு செய்தல், படங்களைக் கணிப்பொறியில் வைத்தல், தேவையானபோது தேடி எடுத்தல் வெளியீடுகளை ஆய்வு செய்தல் புள்ளிவிவரப் பகுப்பாய்வு
  • தரவு மேலாண்மை அடிப்படையிலான ஐ.டீ.இ.எஸ். சேவைகள் மூலமாகப் பெரிதும் பயனடையக்கூடிய நிறுவனங்கள்:
  • கணக்குவைப்பு, நிதியியல் சேவைகள் போன்ற பின்னணி
   அலுவலகச் செயல்பாடுகள்
  • வங்கித்துறை
  • அரசுத்துறைகள் மருத்துவமனைகள்
  • காப்பீட்டுத்துறை
  • சட்டத்துறை
  • உற்பத்தி நிறுவனங்கள்
  • நகராட்சிகள் காவல்துறை
  • பொதுமக்கள் நுகர்சேவைகள்
  • பதிப்புத்துறை தொலைத்தொடர்பு
  • போக்குவரத்து
 • இப்பிரிவுகளில், தரவுப் பாதுகாப்பு, வாடிக்கையாளர் தனிமறை ஆகிய இரண்டும் முக்கியமான கூறுகளாகும்.
 • ஐ.டீ.இ.எஸ். ஐ.ஈ.இ.எஸ். சேவையாளர் ஒருவரே பல நிறுவனங்களுக்கும் சேவை வழங்க முடியும்.
 • எனவே ஒவ்வொரு நிறுவனத்தின் தனிமறைக் கூறுகளுக்கும் ஐ.டீ.இ.எஸ். சேவையாளர் உத்திரவாதம் தரவேண்டும்.
 • கணிப்பொறி நன்னெறி ஐ.டீ.இ.எஸ்ஸின் வெற்றிக்கு இன்றியமையாததாகும்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)