நீலகேசி

 • நீலகேசி ஐஞ்சிறுங்கப்பியங்களுள் ஒன்று.
 • சமண சமயக் கருத்துகளை தத்துவங்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது நீலகேசி,
 • நீலகேசி ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
 • நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்களாகப் (பத்து) 10 சருக்கங்களைக் கொண்டது.
 • நீலகேசி காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு 2 பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

நோய்கள்

 • மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன நோய்கள்.
 • உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர் குறிப்பிட்டனர்.
 • உள்ளத்தில் தோன்றும் தீய எண்ண நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை விளக்கும் பாடல்

பாடல்-113

தீர்வனவும் தீராத் திறத்தனவும்

செய்ம் மருந்தின் ஊர்வனவும் போலாதும்  உவசமத்தின்

உய்ப்பனவும்

யார் வினவும் காலும் அவை மூன்று கூற்றவா

நேர்வனவே ஆகும் நிழல் இகழும் பூணாய்***

பாடலின் பொருள்

 • ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே!
 • நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது (மூன்று) 3 வகைப்படும் என அறிவாயாக.
 • மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
 • எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
 • அடங்கி இருப்பன போல வெளித் தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

பாடல் – 116

பேர்தற்கு அரும்பிணி தாம் இவை

அப்பிணி தீர்தற்கு உரிய திரியோக மருந்து இவை ஓர்தல்

தெளிவோடு ஒழுக்கம் * * *

இவையுண்டார் பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்ப

முற்றே * * *

பாடலின் பொருள்

அகற்றுவதற்கு அரியவை பிறவி துன்பங்கள் ஆகும்.

இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று.

நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.

இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

சொல்லும் பொருளும்

 • தீர்வன  –  நீங்குபவை
 • திறத்தன – தம்னையுடையன
 • உவசமம் – அடங்கி இருத்தல்
 • கூற்றவா – பிரிவுகளாக
 • நிழல் இகழும் –  ஒளி பொருந்திய
 • பேர்தற்கு – அகற்றுவதற்கு
 • ஓர்தல் – நல்லறிவு
 • தெளிவு – நற்காட்சி
 • பிணி  – துன்பம்
 • பிறவார் – பிறக்கமாட்டார்
 • பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
 • திரி யோக மருந்து – மூன்று யோக மருந்து

நீலகேசி

புத்தமதத் துறவியருடன் நீலகேசியின் தாவரங்கள் மற்றும் ஒலியும் ஒளியும் தொழில் நுட்ப வாதம்

தகவல்

 • அறிவியல் உலகில், 19ஆம் நூற்றாண்டில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் ஜகதீச சந்திரபோஸ்

தாவரங்களுக்கு உயிர் உண்டு

பாடல் – மொ.வா.ச.364

தாவரங்களுக்கு உயிர் உண்டு! * * *

யாதினு மாழ்கும் அம் மாழ்கியும் என்றுழி

நீ தின்னும் தோலை நெருப்பொடு கூட்டத்தின் ஓதினை தேறுற நீர்க்குரைத்தாய்***

மற்றும் சேதனை இல்லாய் திரிவு என்னை வண்ணம்.

சொல்லும் பொருளும்

 • மாழ்குதல் – மயங்குதல்
 • மாழ்கி – தொட்டால் சுருங்கி
 • சேதனை – அறிவு.

பாடலின் பொருள்

மொக்கலனே, நீ உண்ணும் பழத்தோலிற்கு உயிர் இல்லாததைப் போன்று தாவரங்களுக்கும் உயிரில்லை என்கிறாய்.

மொக்கலனே, நீ உண்ணும் பழத்தோல் நெருப்பில் பட்டுச் சுருங்கினால் அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாது.

ஆனால், தொட்டால் சுருங்கித் தாவரம் நாம் தொடுவதை நிறுத்தினால் சற்று நேரத்தில் மீண்டும் பழைய நிலையை எய்திவிடும்

எனவே, தாவரங்களுக்கும் உயிர் உண்டு.

இதிலிருந்து உன் கருத்து உண்மைக்கு மாறுபட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

தாவரங்கள்  உயிரினப் பண்புகளைப் பெற்றுள்ளன

பாடல் – மொ.வா.ச.365

அரும்பும் மலரும் அரும்பிணி தீர்வும் ஒருங்குதம்

காரணத்து***

ஆக்கம் உணர்த்தும் மரங்களும் மன்னுயிர் எய்தின

என்ன இரும்பொடு காந்தம் இயைவுஇல் திரிவே * * *

சொல்லும் பொருளும்

 • அரும்புதல் – பருத்தல்
 • இயைபுஇல் – பொருத்தமற்றது
 • ஆக்கம் – உயிருடைத்து

பாடலின் பொருள்

இளவேனிலில் மரங்கள் வளர்கின்றன. மலர்கின்றன, நோய் வாய்ப்பட்டுப் பிறகு மீள்கின்றன.

இவ்வாறு தாவரங்கள் உயிரினப் பண்புகளைப் பெற்றுள்ளன. இதுவே என் கருத்து.

ஆனால் மொக்கலனே, நீயோ காந்தம் இரும்பைக் கவருகின்றது, அதனால், காந்தத்திற்கு உயிருண்டு எனப் பொருந்தாத உவமையைக் கூறுகின்றாய்

தாவரங்கள் பருவ மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றத்திற்கு உட்படுகின்றன

பாடல் – மொ.வா.ச.366

ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மையாம்

இனி இப்படித் தோன்றும் இருதுக்கள் சார்ந்தெனச் செப்பிய வேதுத்

திரிவு எனக் காட்டிய வெப்பம் குளிர் அவை தாம் அவையே யால்.

பாடலின் பொருள்

தாவரங்களுக்கும் உயிர் உண்டு.

அவை பருவ மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றத்திற்கு உட்படுகின்றன என நான் கருத்துரைக்கின்றேன்.

மொக்கலனே, பருவ காலங்கள் மாறுகின்றன. அதனால், பருவங்களுக்கு உயிர் உண்டோவென வினவுகிறாய் உன் கருத்துப் பொருந்தாது.

ஒலியும் ஒளியும்

தகவல்

 • ஒலியின் திசை வேகத்தை பியரி கேடன்டி வெளிப்படுத்தினர்.
 • ஒலியின் திசை வேகம் 331 மீ/வி. ஒளியின் திசை வேகத்தை 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமர் வெளிப்படுத்தினர். ஒளியின திசை வேகம் 3 X 108 மீ/வி.
 • எனவே ஒலி ஒளியும் ஒரே நேரத்தில் தோன்றினாலும் ஒளியே நம்மை விரைவில் வந்தடையும்

பாடல்-பு.வா.ச.516

ஒலி, ஒளித் திசைவேகம் உற்றில வாய் ஒலி கொள்ளும் செவியென ஒதுகின்றாய்

கற்றிலை மெய்ம்மை நீ கட்புலம் தன்னோடு ஓர்

காலத்தினால் பெற்றில

நாம் அதன் பின் கொளல் தானும் பெருந்தவத்தாய் மற்றிது

தான் தன் பொறியுறு காறும் வரலின் அன்றே.*

பாடலின் பொருள்

 • காதுகள் ஒலியைக் கவரும் என்கிறாய் ஆனால் காதுகளால் ஒலியைக் கவர இயலாது.
 • ஒரே நேரத்தில் தோன்றுகின்ற ஒளி ஒலியை நாம் ஒரு சேரப் பெறுவதில்லை.
 • ஒளியை முன்னரே காண்கிறோம் அதன் பின்னரே ஒலியைக் கேட்கிறோம்
 • எனவே, ஒலிதான் செவியை வந்தடைகின்றது. செவி ஒலியை அடைவதில்லை

சொல்லும் பொருளும்

 • கற்றிலை – அறியவில்லை
 • பெருந் தவத் தாய் – பெரிய தவமுடையவர்

ஒலி

கட்டளைக் கலித்துறையைச் சார்ந்த பாடல்

இப்பாடல் கட்டளைக் கலித்துறையைச் சார்ந்தது.

பாடல்-பு.வா.ச.517

வாய்த்துரை ஈதென வாமன் இது சொல்லும் **

வந்துறு மேல் சேய்த்தெனக் கோடலும் சேராது ஒலி

செவிக் கண்ணது எனின் ஈத்தன தாமல வாயினு நீ சொல்லு

முற்றறிவின் தீத்தனைப் போலவும் தேறென்று அவனைத் தெருட்டினளே. *

பாடலின் பொருள்

 • ஒலியானது வெளியில் இருந்து வந்து காதுகளை அடைகிறது.
 • ஒலி உள்ளே தோன்றுவது கிடையாது.
 • ஒலியைக் காதுகள் ஈர்ப்பது இல்லை, உணர்கின்றன.
 • நம் புலன்கள் உணர்வுடையன தீயின் வெப்பத்தை உடல் உணர்கின்றது.
 • அதைப் போன்று புலனறிவின் மூலம் காதும் ஒலியை உணர்கின்றது.

சொல்லும் பொருளும்

 • வாய்த்துரை – பொருத்தமான உரை
 • வாமன் – அருகன்
 • தேறு – தெளிவாக

முந்தைய ஆண்டு வினாக்கள்

கூற்று 1 நீலகேசி ஒரு சமணசமயக் காப்பியம்,
கூற்று 2 குண்டலகேசி என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது நீலகேசி.
(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று இரண்டும் சரி
(C) கூற்று 2 மட்டும் சரி
(D) கூற்று இரண்டும் தவறு

குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?
(A) சூளாமணி
(B) நாககுமார காவியம்
(C) யசோதர காவியம்
(D) நீலகேசி

சிற்றிலக்கியத்திற்குப் பொருந்தாத நூலைக் காண்க.
(A) பதிகம்
(B) நீலகேசி
(C) ஊசல்
(D) சதகம்

நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது?
(A) வஞ்சிப்பா
(B) விருத்தப்பா
(C) வெண்பா
(D) கலிப்பா

பொருந்தா இணையைக் கண்டறிக:
வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்
(A) இயேசு பெருமான் எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
(B) சிவபெருமான் சுந்தரர்
(C) புத்தபிரான் நீலகேசி
(D) நபிகள் நாயகம் உமறுபுலவர்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!