அடிமை வம்சம் (பொ.ஆ.1206 – 1290)

  • அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை குத்புதின் ஐபக் நாட்டினார்.
  • இவ்வரச மரபு மம்லுக்அரச மரபென்றும் அழைக்கப்பட்டது.
  • மம்லுக் எனும் அரபிய வார்த்தைக்குஅடிமை என்று பொருள்.
  • அடிமை வம்சம் 84 ஆண்டுகள் துணைகண்டத்தை ஆட்சிபுரிந்தது.
  • இக்காலத்தில் மூன்று மரபுகள் ஏற்படுத்தப்பட்டன. அவை,
  1. குத்புதின் ஐபக் நிறுவிய குத்பி மரபு (1206-1210)
  2. இல்துமிஷ் நிறுவிய முதல் இல்பாரி மரபு (1211 – 1266)
  3. பால்பன் நிறுவிய இரண்டாவது இல்பாரி மரபு (1266 -1290)

குத்புதீன் ஐபக் (1206-1210)

  • குத்புதீன் ஐபக், கஜினியில் ஓர் அடிமையாக சுல்தான் முகமது கோரிக்கு விற்கப்பட்டார்.
  • முகமதுகோரி, இந்தியாவில் தான் வெற்றிபெற்ற ஒரு மாகாணத்திற்கு பொறுப்பு ஆளுநராக அவரை நியமித்தார்.
  • குத்புதீன் லாகூரைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார்.
  • பின்னர் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்.
  • முஸ்லிம் எழுத்தாளர்கள் ஐபக்கைலாக் பக்சா என அழைக்கின்றனர்.
  • அவர்களுக்கு தாராளமாக கொடைகளை வழங்கியதால் அவ்வாறு அழைக்கின்றனர்.
  • ஹசன் நிசாமி என்ற சிறந்த அறிஞரை இவர் ஆதரித்தார்.
  • கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பை பக்தியார் கில்ஜி என்பாரிடம் ஒப்படைத்தார்.
  • ஐபக் டெல்லியில் குவ்வத்உல்இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார்.
  • அதுவே இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுகிறது.
  • சூஃபித்துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் என்பவரின் பெயரில் குதுப்மினாரை கட்டத் தொடங்கினார்.
  • அவருடைய மருமகனும் அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவருமான இல்துமிஷ் குதுப்மினாரைக்கட்டி முடித்தார்,
  • போலோ (சௌகான்) விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த ஐபக் 1210இல் இயற்கை எய்தினார்.

இல்துமிஷ் (1210 – 1236)

  • சம்சுதீன் இல்துமிஷ் துருக்கிய இனத்தைச் சார்ந்த குத்புதீன் ஐபக்கின் அடிமை.
  • அவரது அரசு குலம் இல்பாரிக் குலம் எனப்பட்டது.
  • செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் என்பார் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார்.
  • அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்ததன் மூலம் இல்துமிஷ் மங்கோலிய ஆபத்தைத் தவிர்த்தார்.
  • மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார்.
  • அக்குழு சகல்கானிஅல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
  • டெல்லி சுல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறைஇக்தாரி.
  • இக்தா என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலமாகும்.
  • நிலத்தைப் பெற்றவர் இக்தார் அல்லது முக்தி என்றழைக்கப்பட்டார்.
  • இவர் போர்க்காலங்களில் சுல்தானுக்கு ராணுவ உதவிகள் செய்ய வேண்டும்.
  • தனது படைகளையும் குதிரைகளையும் பராமரிப்பதற்காக இக்தார் தனக்கு வழங்கப்பட்ட நிலங்களிலிருந்து வரிவசூல் செய்துகொள்வார்.
  • ஐபக்கால் தொடங்கப்பட்ட குதுப்மினாரின் (243 அடி) கட்டுமானப் பணிகளை இல்துமிஷ் நிறைவுசெய்தார்,
  • தங்கா என்ற வெள்ளி நாணயம் 175 மி.கி. எடை கொண்டது.
  • அதில் அராபிய மொழி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.
  • ஜிடால் என்ற செம்பு நாணயமும் அவர் வெளியிட்டார்.
  • அரேபிய மொழியில் நாணயங்கள் வெளியிட்ட முதல் துருக்கியர் என்ற சிறப்பை இல்துமிஷ் பெற்றார்.
  • கி.பி. 1236 இல் உடல் நலக்குறைவால் இல்துமிஷ் மரணமடைந்தார்.

இரஸியா சுல்தானா (1236 – 1240)

  • சுல்தான்கள் வரிசையில் வந்த முதல் பெண்ணரசி இரஸியா ஆவார்.
  • இவர் பேரரசர் இல்துமிஷின் மகள்.
  • மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணி, இபின் பதூதாவின் கூற்றுப்படி,

– குதிரை மீது ஆண்கள் சவாரி செய்வதைப் போல், கையில் வில் அம்புடன் அரச பரிவாரங்கள் சூழ இரஸியாவும் சவாரி செய்தார்.

  • தனது முகத்துக்கு அவர் திரையிடவில்லை.
  • தெற்குப் பஞ்சாபில் கலகக்கார ஆளுநர் அல்துனியாவைத் தண்டிப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைச் சதிகாரர்கள் பயன்படுத்தி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள்.

கியாசுதீன் பால்பன் (1266 – 1287)

  • பால்பன் துருக்கிய இனத்தில், இல்பாரி என்னும் பிரிவைச் சேர்ந்தவர்.
  • ‘தெய்வீக உரிமைக் கோட்பாட்டில்நம்பிக்கைக் கொண்டவராக இருந்தார்.
  • இக்கோட்பாட்டில் அரசர் கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்படுவார்.
  • பைபோஸ் என்னும் புதிய வணக்க முறையை நடைமுறைப்படுத்தினார்.
  • நவ்ரோஸ் என்ற பாரசீகத் திருவிழாவையும் ஆடம்பரமாக அவர் கொண்டாடினார்.
  • நாற்பதின்மர் என்றறியப்பட்ட துருக்கியப் பிரபுக்கள் குழு அவரோடு பகைமை பாராட்டியதால் அவ்வமைப்பைப் பால்பன் ஒழித்தார்.
  • திவானி அர்ஸ் என்ற ராணுவத் துறையை ஏற்படுத்தி ராணுவ நிர்வாகத்தை சீரமைத்தார்.
  • மேவாடிஸ் என்ற கொள்ளையர்களால் டெல்லியின் புறநகர் பகுதிகள் அடிக்கடி சூறையாடப்பட்டன.
  • செங்கிஸ்கானின் பேரனும், ஈரானின் மங்கோலிய வைஸ்ராயுமான குலகுகான் என்பாரிடமிருந்து மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள் எனும் உறுதிமொழியைப் பால்பன் பெற்றார்.
  • பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமிர்குஸ்ரு என்பாரைப் பால்பன் ஆதரித்தார்.
  • பால்பனின் மகனான கைகுபாத் திறமையற்றவராக இருந்தார்.
  • வடமேற்கில், மேவாரைச் சுற்றிய அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மியோ என்ற ஓர் இஸ்லாமியச் சமூகம் கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டிருந்தது.
  • இதை ஒரு சவாலாக ஏற்ற பால்பன் தாமே முன்னின்று மேவாரைச் சோந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்.
  • வங்கத்தின் ஆளுநராக பால்பனின் மகன் புக்ரா கான் ஒரு சுதந்திர அரசாட்சியாகப் பிறகு பிரிந்து போனாரேயன்றி தந்தையின் அரியணையைக் கோரவில்லை.
  • இதனால் தில்லியில் ஒரு தலைமை நெருக்கடி ஏற்பட்டது.
  • மேலும், அவரது மகன் கைகுபாத், சிற்றின்பத்தில் வீழ்ந்து கிடந்தார்.
மங்கோலியன்

Ø  மங்கோல் என்ற பெயர், மங்கோலிய மொழி பேசக்கூடிய மத்திய ஆசிய நாடோடிக் குழுக்கள் அனைத்தையும் குறிக்கும்.

Ø  பன்னிரண்டாம் நூற்றாண்டில் அவர்கள் செங்கிஸ்கான் தலைமையில் ஒரு மிகப் பெரிய அரசாட்சியை நிறுவினர்.

Ø  நவீன ரஷ்யாவின் பெரும்பகுதி, சீனா, கொரியா, தென்கிழக்கு ஆசியா, பாரசீகம், இந்தியா, மத்தியக் கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றை அவரது அரசாட்சி உள்ளடக்கி இருந்தது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!