இன்னா நாற்பது – கபிலர்

இன்னா நாற்பது

  • இன்னா நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்..
  • இன்னா நாற்பது நூல் அறக்கருத்துக்களை பற்றி கூறுகிறது.
  • இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் கபிலர்.
  • ஒவ்வொரு கருத்தின் முடிவிலும் “இன்னா” எனக் கூறப்படுவதால் இன்னா நாற்பது என்றழைக்கப்படுகிறது.
  • இன்னா- துன்பம்
  • துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல் இன்னா நாற்பது.
  • எவை எவை இன்னாதவை என இன்னா நாற்பது பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
  • இன்னது இன்னது இன்னா என (நாற்பது) 40 பாடல்களில் கூறுவதால் இன்னா இன்னா நாற்பது நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், மாயோன், முருகன் ஆகிய நால் ரையும் இன்னா நாற்பது குறிப்பிட்டுள்ளது.
  • கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு (4) கடவுளரையும் வணங்காமை துன்பம் தரும் என இன்னா நாற்பது கூறுகிறது
  • சங்க காலத்தை ஒட்டிய குறிப்பை பலராமனை கூறியதன் மூலம் வழங்குகிறது இன்னா நாற்பது.
  • இன்னா நாற்பது நூலில் மொத்தம் 41 பாடல்கள் (1 + 40) உள்ளன
  • இன்னா நாற்பது நூல் வெண்பா வகையால் எழுதப்பட்டுள்ளது.
  • இன்னா நாற்பது நூலில் கடவுள் வாழ்த்து பட 41 வெண்பாக்கள் உள்ளன.
  • அம்மை என்ற வனப்பிற்கு உரியது இன்னா நாற்பது கபிலர்

கபிலர்

  • இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் கபிலர்.
  • கபிலரது காலம் கி.பி. (நான்காம்) 4ம் நூற்றாண்டு.
  • கபிலர் சைவ வைணவ பேதம் இல்லாதவர்.
  • சங்க கால கபிலரும், இன்னா நாற்பது நூலினை இயற்றிய கபிலரும் வேறு வேறு நபர்கள்.

ஐந்து கபிலர்கள்

  1. பாரி மன்னனை பாடிய சங்கக் கபிலர்.
  2. இன்னா நாற்பது பாடிய கபிலர்
  3. (பதினொன்றாம்) 11ம் திருமுறையில் கூறப்படும் கபில தேவ நாயனார்.
  4. (பன்னிரு) 12 பாட்டிலில் பாடல்களை பாடிய கபிலர்.
  5. அகவற்பா பாடிய கபிலர்.

இன்னா நாற்பது சிறந்த தொடர்கள்

  • அடைக்கலம் வவ்வுதல் இன்னா
  • இன்னா ஈன்றாளை ஓம்பாவிடல்
  • இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு
  • இன்னா மறையின்றிச் செய்யும் வினை
  • உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா
  • ஊனைத் தின்று ஊனைப் பெருக்கல் முன் இன்னா
  • குழவிகள் உற்ற பிணி இன்னா
  • தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா

முந்தைய ஆண்டு வினாக்கள்

பொருந்தாத இணையைக் கண்டறிக :
A) முல்லைப்பாட்டு – மதுரைக்காஞ்சி
B) இன்னா நாற்பது – பட்டினப்பாலை
C) இன்னிலை – பழமொழி
D) தமிழ்மறை – நான்மணிக் கடிகை.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!