குப்தர்கள் ஆட்சியில் – சமுதாய நிலை

நிலம் மற்றும் விவசாயிகள்

  • காமாந்தகரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக்கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது.
  • நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது.

மாவட்ட மட்டத்திற்குக் கீழே இருந்த நிர்வாக அலகுகள்

  • மாவட்ட மட்டத்திற்குக் கீழ் விதி, பூமி, பதகா, பீடா என்று பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் இருந்தன.
  • ஆயுக்தா,விதி – மஹாதரா எனப்படும் அதிகாரிகள் குறித்த குறிப்புகளும் காணப்படுகின்றன.
  • மஹாதாரா என்பதற்கு கிராமப் பெரியவர், கிராமத் தலைவர், குடும்பத் தலைவர் என்று பல பொருள் உண்டு.
  • கிராம மட்டத்தில் கிராமிகா, கிராம் அத்யக்ஷா போன்ற அதிகாரிகள் இருந்துள்ளனர்.
  • இவர்களை கிராம மக்களே தேர்ந்தெடுத்தனர்.
  • புத்தகுப்தர் காலத்து தாமோதர்பூர் செப்பேடு, மஹாதாரா என்பவர் தலைமையிலான அஷ்டகுல – அதிகாரனா (எட்டு உறுப்பினர் கொண்ட குழு) குறித்து குறிப்பிடுகிறது.
  • இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்சமண்டலி என்பதைக் குறிப்பிடுகிறது. இது ஒரு குழும நிறுவனமாக இருக்கலாம்.

சமூகம்

  • குப்தர் காலச் சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட வர்ண முறையில் அமைந்திருந்தது.
  • அது தந்தைவழிச் சமூகமாக இருந்தது.
  • மனுவின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
  • பலதார மணம் பரவலாக நடைமுறையில் இருந்தது.
  • குபேரநாகா, துருபசுவாமினி ஆகிய இருவரும் இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியர் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
  • உடன்கட்டை (சதி) ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது,

அடிமை முறை

  • குப்தர்கள் காலத்தில் பலவகைப்பட்ட அடிமைகள் இருந்ததாகச் சான்றுகள் உணர்த்துகின்றன.

பெண்களின் நிலை

  • குப்தர் காலத்தில் மகளிர் நிலைமையும் மோசமடைந்தது.
  • புராணங்கள் போன்ற சமய நூல்களைப் படிப்பதற்கு அவர்களுக்கு அனுமதியில்லை.
  • பெண்கள் ஆண்களால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கருணையுடன் நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
  • சுயம்வரம்நடத்தும் பழக்கம் கைவிடப்பட்டது.
  • மனுஸ்மிரிதி பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தது.

மதம்

  • வேத மதமும் வேதச் சடங்குகளும் புத்துயிர் பெற்று, மீண்டும் நடைமுறைக்கு வந்தன.
  • சமுத்திரகுப்தரும் முதலாம் குமாரகுப்தரும் அஸ்வமேதயாகம் (குதிரைகளைப் பலி கொடுத்துச் செய்யப்படும் வேள்வி) நடத்தினர்.
  • குப்தர்கள் காலத்தில்தான் உருவ வழிபாடு தொடங்கியதையும் வைணவம், சைவம் ஆகிய இரு பிரிவுகள் தோன்றியதையும் காண்கிறோம்.
  • பெரும்பாலான குப்த அரசர்கள் வைணவர்களாக இருந்தனர்.
  • இக்காலத்தில்தான் வாலாபியில் சமண சமய மாநாடு கூட்டப்பட்டது.
  • சுவேதாம்பரர்களின் சமண விதிகள் எழுதப்பட்டன.

இராணுவம்

  • முத்திரைகள், கல்வெட்டுகள் ஆகியன பாலாதிகிருத்யா, மஹாபாலாதிகிருத்யா (காலாட்படை மற்றும் குதிரைப்படை தளபதி) போன்ற ராணுவப் பதவிகளைக் குறிப்பிடுகின்றன.
  • குதிரைப்படை மற்றும் யானைப்படை ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர்கள் முறையே மகாஸ்வபதி, மகாபிலுபதி என்றழைக்கப்பட்டுள்ளனர்.
  • வைசாலி முத்திரை ராணுவக்கிடங்கின் அலுவலகமான ரணபந்தகர் அதிகாரனாவைக் குறிப்பிடுகிறது. மற்றொரு வைசாலி முத்திரை, தண்டபாஷிகா என்ற அதிகாரியின் அலுவலகத்தைக் குறிப்பிடுகிறது.
  • துதகா என்றழைக்கப்பட்ட ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பும் இருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!