இராவண காவியம் – புலவர் குழந்தை

இராவண காவியம்

  • இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை.
  • 20ம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
  • இராவண காவியம் ஐந்து (5) காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.

இராவண காவியத்தில் உள்ள ஐந்து காண்டங்கள்

    1. தமிழகக் காண்டம்
    2. இலங்கைக் காண்டம்
    3. விந்தக் காண்டம்
    4. பழிபுரி காண்டம்
    5. போர்க் காண்டம்
  • இராமாயணத்தில் எதிர் நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.
  • இராவண காவியத்தில் பாடப்பட்ட ஐந்தினை வரிசை – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்*
  • தமிழகக் காண்டத்திலுள்ள பாடல்கள் பாட குதியில் இடம்பெற்றுள்ளன.

புலவர் குழந்தை

  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கினங்க புலவர் குழந்தை, திருக்குறளுக்கு 25 நாள்களில் உரை எழுதியுள்ளார்.
  • யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் (30) மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் புலவர் குழந்தை படைத்துள்ளார்

இராவண காவியத்தை பாராட்டிய பேரறிஞர் அண்ணா

  • “காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி புரட்சிப் பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று இராவண காவியத்தை பேரறிஞர் அண்ணா புகழ்ந்தார்.
  • இராவண காவியத்தை பேரறிஞர் அண்ணா புகழ்ந்தது
    • காலத்தின் விளைவு
    • ஆராய்ச்சியின் அறிகுறி.
    • புரட்சிப் பொறி.
    • உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்

இராவண காவியம் தமிழகக் காண்டம்

குறிஞ்சி

பாடல் – 49

அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய

தமிழிசை பாடப்

பொன்மயில் அருகிய சிறைவிரித் தாடப்

பூஞ்சினை மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்.

பாடலின் பொருள்

  • அருவிகள் பாறையாய் ஒலிக்கும்; பைங்கிளி தானறிந்த தமிழிசையை பாடும்
  • பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையைான சிறகினை விரித்து ஆடும்
  • இக்காட்சியினைப் பூக்கள்  நிறைந்த மரக்கிளையில் அமர்ந்திருக்கும் குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.

பாடல் – 52

  • அடுப்பிடு சாந்தமோடு அகிலின் நாற்றமும்
  • துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும்
  • மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற் கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே

பாடலின் பொருள்

  • தீயில் இட்ட சந்தனமரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும்
  • உலையிலிட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும்
  • காந்தாள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தேய்ந்து கிடந்ததனால்
  • எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.

சொல்லும் பொருளும்

  • முருகியம் –  குருஞ்சிப்பறை
  • பூஞ்சினை  – பூக்களை உடைய
  • சிறை  –  இறகு
  • மைவனம்  – மலைநெல்
  • சாந்தம் –  சந்தனம்

பாடல் 58

பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும் பாஇசை பாடமுப் பழமும் தேனும் தந்தே இசை பெறும்

கடறு இடையர் முக்குழல் ஆவினம் ஒருங்குற அருகு அணைக்குமால்

பாடலின் பொருள்

  • நகாணவாய்ப் பறவைகளும் குயில்களும் அழகுமிக்க வண்டுகளும் பாவிசைத்துப் பாடின.
  • புகழ்பெற்ற முல்லை நில மக்களான ஆயர், முக்கனியும்  தேனும் சேகரித்துக் கொண்டு முக்குழல் இசையால்  மேயும் பசுக் கூட்டங்களை ஒன்று சேர்த்தனர்.

பாடல் – 60

முதிரையும் சாமையும்  வரகும் மொய்மணிக் குதிரைவாலியும்

களம் குவித்துக் குன்று எனப் பொதுவர்கள்

பொலி உறப்போர் அடித்திடும் அதிர்குரல் கேட்டு உழை அஞ்சி ஓடுமே!

பாடலின் பொருள்

  • முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவாலி நெல் ஆகியவற்றை
  • முல்லை நில மக்கள் அறுத்துக் கதிரடித்துக் களத்தில் குன்று போல குவித்துக் வைத்திருப்பர்.
  • கதிரடிக்கும் அதிர்வு தரும் ஒலியைக் கேட்டு மான்கள் அஞ்சி ஓடும்

சொல்லும் பொருளும்

  • பூவை   –  நாகணவாய்ப் பறவை
  • பொலம்  – அழகு
  • கடறு  – காடு
  • முக்குழல் – கொன்றை, ஆம்ப மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்
  • பொலி – தானியக்  குவியல்
  • உழை – ஒரு வகை மான்

பாலை

பாடல் 65

மன்னிய முதுவெயில் வளைப்ப வாய் வெரீஇ இன்னிளம் குருளை மிக்கு இனைந்து வெம்பிடத்

தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற

நன்னரில் வலிய செந்நாய் உயங்குமே.

பாடலின் பொருள்

  • கொடிய பாலை நிலத்து வெயிலின் வெப்பத்தைத் தாங்க இயலாத செந்நாய்க்குட்டி, வாய் மிகவும் உலர்ந்து குழறியது.
  • இதனைக் கண்டு அதன் தாய் வருந்தியது.
  • குட்டி இளைப்பாற எங்கும் நிழலில்லை.
  • எனவே கடும் வெயிலில் தான் துன்புற்று நின்று, தனது நிழலில் குட்டியை இளைபாறச் செய்தது.

பாடல் – 67

கடிக்கமழ் மராமலர்க் கண்ணி அம்சிறார் படிக்குற

எருத்துக்கோடு அன்ன பாலைக்காய் வெடிக்கவிட்டு ஆடிட

விரும்பிக் கோலினால் அடிக்கும் ஓசையின் பருந்து அஞ்சி ஓடுமே

சொல்லும் பொருளும்

  • வாய் வெரீஇ –  சோர்வால் வாய் குழறுதல்
  • குருளை – குட்டி
  • இனைந்து  –  துன்புறுதல்
  • உயங்குதல் – வருந்துதல்
  • படிக்குஉற –  நிலத்தில் விழ
  • கோடு  –  கொம்பு

பாடல் 72

கல்லிடைப் பிறந்த ஆறும் கரைபொரு குளனும் தோயும்

முல்லைஅம் புறவில் தோன்று முருகுகான் யாறு பாயும் நெல்லினைக் கரும்பு காக்கும் நீரினைக் கால்வாய் தேக்கும்

மல்லல்அம் செறுவில் காஞ்சி வஞ்சியும் மருதம் பூக்கும்

பாடலின் பொருள்

  • மலையிடை தோன்றும் ஆறும் கரையை மோதித் ததும்பும் குளத்து நீரும்
  • முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத நிலத்தில் பாய்ந்தோடும்
  • அங்கு நெற்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும்.
  • பெருகி வரும் நீரினைக் கால்வாய் வழி வயலில் தேக்கி வளம் பெருக்கும்.
  • இத்தகு வளம் நிறைந்த மருதநில வயலில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.

பாடல்-77

மரைமலர்க் குளத்தில் ஆடும் மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட பொருகரிக் குருத்து அளந்து பொம்மெனக் களிப்பர்

ஓர்பால் குரைகழல் சிறுவர் போரில் குலுங்கியே தெங்கின் காயைப் புரைதபப் பறித்துக் காஞ்சிப் புனை நிழல் அருந்து வாரே.

பாடலின் பொருள்

  • தாமரை மலர்கள் பூத்திருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர். அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து, அதன் வடிவழகு கண்டு மகிழ்ந்தனர்
  • சிறுகழல் அணிந்த சிறார்கள் வைக்கோற் போர் குலுங்கிடும்படி ஏறி, தென்னை இளநீர்க் காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்.

சொல்லும் பொருளும்

  • கல் – மலை
  • முருகு –  தேன், மணம், அழகு
  • மல்லல் – வளம்
  • செறு – வயல்
  • கரிக் குருத்து – யானைத் தந்தம்
  • போர்  – வைக்கோற்போர்
  • புரைதப – குற்றமின்றி

 நெய்தல்

 பாடல் –82

பசிபட ஒருவன் வாடப் பார்த்து இனி இருக்கும் கீழ்மை முசிபட ஒழுகும் தூய முறையினை அறிவார் போல வசிபட முதுநீர் புக்கு *

மலையெனத் துவரை நன்னீர் கசிபட ஒளிமுத்தோடு கரையினில் குவிப்பார் அம்மா

பாடலின் பொருள்

  • தூய ஒழுகமுறையைப் பின்பற்றுபவர்கள், பசித்துயரால் துன்புறுவோரைக் கண்டு வருந்துவார்கள். அதுபோலத்
  • தான் வாழும் இடமானது மூழ்குமாறு பெரும் கடலலை புகுந்துவிட்டாலும்,
  • மலையளவுக்குப் பவளங்களையும் நல் இயல்பு தோன்றும் ஒளி முத்துக்களையும் நெய்தல் நிலத்தவர் கடற்கரையில் கொண்டு வந்து குவிப்பர்.

பாடல்-84

வருமலை அளவிக் கானல் மணலிடை உலவிக் காற்றில் சுரிகுழல் உலர்த்தும் தும்பி

தொடர்மரை முகத்தர் தோற்றம் இருபெரு விசும்பிற் செல்லும்

பாடலின் பொருள்

  • தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும்
  • பின்னர்ப் பெண்களின் முகத்தைத் தாமரை மலரெனக் கருதித் தொடர்ந்து செல்லும்
  • அது வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல உள்ளது.

சொல்லும் பொருளும்

  • துவரை    – பவளம்
  • தும்பி  –  ஒருவகை வண்டு
  • மரை – தாமரை மலர்
  • விசும்பு  –  வானம்
  • மதியம்  –  நிலவ

முந்தைய ஆண்டு வினாக்கள்

“காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப் பொறி. உண்மையை உணரவைக்கும் உன்னத நூல்” என்று பேரறிஞர் அண்ணாவால் குறிப்பிடப்படும் நூல்
(A) புரட்சி கவி
(B) இராவண காவியம்
(C) ஊரும் பேரும்
(D) பாஞ்சாலி சபதம்
(E) விடை தெரியவில்லை

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!