ஆங்கிலேயர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம்

  • வாஸ்கோடகாமா இந்தியாவிலுள்ள கோழிக்கோட்டிற்கு மே 20, 1498ல் வந்ததற்குப் பின்னரே இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுடனான கடல் வாணிகம் ஆரம்பித்தது.
  • போர்ச்சுகீசியர்கள் 1510லிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தனர்.
  • 1858-ல் ஆங்கிலப் பாராளுமன்றம், இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றி, ஒரு சட்டம் இயற்றியது.

ஆங்கிலேயர் கால வரலாறு:

  • ஆங்கிலேயர் நுழைவுக்கு முன் இந்தியப் பொருளாதாரம் கிராமத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்தது.
  • அப்போது கிராமப் பொருளாதாரமானது சுயசார்புப் பொருளாதாரமாக இருந்தது.
  • காலனி ஆதிக்க சிதைப்பின் அடிப்படையில் முழு காலத்தையும் வரலாற்றுப் பொருளியல் வல்லுநர்கள் மூன்று கட்டங்களாகப் பிரித்தனர். அவை,
  1. வணிக மூலதனக் காலம்,
  2. தொழில் மூலதனக் காலம்,
  3. நிதி மூலதனக் காலம்.

வணிக மூலதனக் காலம்:

  • 1757லிருந்து 1813 வரையிலான காலம் வணிக மூலதனக் காலம் ஆகும்.
  • இக்காலத்தில் பிரிட்டனில் தொழில் மூலதனத்தை முன்னேற்ற இந்தியா ஒரு மிக முக்கியமான சுரண்டல் பிரதேசமாக கிழக்கிந்தியக் கம்பெனி கருதியது.

தொழில் மூலதனக் காலம்:

  • 1813 முதல் 1858 வரையிலான காலம் தொழில் மூலதனக் காலமாகும்.
  • பிரிட்டிஷ் துணிமணிகளின் சந்தையாக இந்தியா விளங்கியது.

நிதி மூலதனக் காலம்:

  • 1858 முதல் 1947 வரையிலான காலம் மூன்றாவது கட்டமான நிதி மூலதனக் காலமாகும்.
  • இக்கால கட்டத்தில் வியாபார நிறுவனங்கள், செலாவணி ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மாற்று வங்கிகள் மற்றும் சில மூலதன ஏற்றுமதிகளில் நிதி ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது.
  • இந்தியாவின் வரி செலுத்துவோர் இருப்புப்பாதை (Railway Line) நிர்மாணத்திற்கு நிதி செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!