குப்தர்கள் ஆட்சியில் – கலையும் கட்டடக்கலையும்

கலையும் கட்டடக்கலையும்

  • குப்தர் காலத்தில் நகரம், திராவிட பாணியிலான கலைகள் வளர்ந்தன.
  • கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே.
  • ஜான்சிக்கு அருகிலுள்ள தியோகார் கோயில், அலகாபாத்துக்கு அருகிலுள்ள கார்வாஸ் ஆலய சிற்பங்கள் குப்தர் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
  • மதுராவிலுள்ள நிற்கும் வடிவிலுள்ள அழகிய புத்தர் சிலையில் சிறிது கிரேக்க சாலையைக் காணலாம்.
  • ஸ்கந்தகுப்தரின் பிடாரி ஒற்றைக் கல்தூண் மகத்தானது.

குடைவரை, கட்டுமானக் கோயில்கள்

  • குடைவரைக் கோயில்கள் அஜந்தா, எல்லோரா (மஹாராஷ்டிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • உதயகிரி குகைகளும் (ஒடிசா) இவ்வகையைச் சேர்ந்தவைதான்.

ஸ்தூபிகள்

  • மிகச் சிறந்த ஸ்தூபிகள் சமத் (உத்தரப்பிரதேசம்), ரத்தினகிரி (ஒடிசா), மிர்பூர்தான் (சிந்து) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

சிற்பங்கள்கல் சிற்பங்கள்

  • சாரநாத்தில் காணப்படும் நிற்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை. புராணச் சிற்பங்களில் மிக அழகானது உதயகிரி குகையின் நுழைவுவாயிலில் இருக்கும் வராஹ அவதாரச் சிலை,

உலோகச் சிற்பங்கள்

  • பீகாரின் நாளந்தாவில் உள்ள புத்தரின் பதினெட்டடி செம்புச் சிலை, சுல்தான்கஞ்சில் உள்ள ஏழரையடி புத்தர் சிலை ஆகிய இரண்டும் குப்தர் காலத்து உலோகச் சிற்பங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஓவியங்கள்

  • குப்தரின் சுவரோவியங்கள் அஜந்தா, பாக், பாதாமி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • அஜந்தாவின் சுவர் ஓவியங்கள் ஃபிரெஸ்கோ எனப்படும் சுவரோவிய வகையைச் சேர்ந்தவையல்ல. ஏனெனில் ஃபிரெஸ்கோ ஓவியங்கள் சுவரின் பூச்சு ஈரமாக இருக்கும்போதே வரையப்படுபவை.
  • ஆனால், அஜந்தாவின் சுவரோவியங்கள் பூச்சு காய்ந்தபின் வரையப்பட்டவை.

சுடுமண் சிற்பங்களும் மட்பாண்டக் கலையும்

  • அச்சிசத்திரா, ராய்கார், ஹஸ்தினாபர், பஷார் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள குப்தர் காலத்து மட்பாண்டங்கள் மட்பாண்டக் கலையின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
  • இக்காலகட்டத்து மட்பாண்டங்களின் தனிப்பட்ட சிறப்பம்சம் சிவப்பு மட்பாண்டங்கள் ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!