திரிகடுகம் – நல்லாதனர்

திரிகடுகம்

    • திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
    • திரிகடுகம் நூலின் ஆசிரியர் நல்லாதானர்.
    • மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் திரிகடுகம்.
    • திரி – மூன்று, கடுகம் – காரமுள்ள பொருள்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றினால் ஆன மருந்துக்கு பெயர் திரிகடுகம்.
  • திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி என திவாகர நிகண்டு கூறுகிறது.
  • சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் 3ம் உடல் நோயைத் தீர்ப்பான
  • மூன்று காரமுள்ள பொருட்கள் போன்று உள்ளந்தின் நோயைத் தீர்க்கும் மூன்று கருத்துக்களை கூறும் நூல் திரிகடுகம்.
  • திரிகடுகம் 101 வெண்பாக்களால் ஆன நூலாகும்.
  • திரிகடுகம் நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது.
  • திரிகடுகம் நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வருகிறது.
  • திரிகடுகம் நூலில் 66 பாடல்களில் நன்மை தருபவை எவை என்பதையும் 34 பாடல்களில் தீமை தருபவை எவை என்பதும் 35 பாடல்களில் கணவன் மனைவி வாழ்க்கை பற்றிய கருத்துகளும் கூறப்பட்டுள்ளது.
  • திரிகடுகம் நூலில் மொத்தம் 300 அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.

நல்லாதனர்

  • திரிகடுகம் நூலின் ஆசிரியர் நல்லாதனர்.
  • நல்லாதனர் திருநெல்வேலி வட்டத்தைச் சேர்ந்த திருத்து என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • “செரு அடு தோள் நல்லாதன்” எனப் திரிகடுகம் பாயிரம் குறிப்பிடுவதால் நல்லாதானர் போர் வீரராக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

திரிகடுகம் முக்கிய பாடல் அடிகள்

  • தாளாளன் என்பான் கடன் பட வாழாதான்
  • தோள் பற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை
  • நட்பின் கொழுநனை பொய் வழங்கின் இல்லாகும்
  • நல்லவை செய்வாள் பெய்யெனப் பெய்யும் மழை
  • நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்
  • நெஞ்சம் அடங்குதல் வீடாகும்
  • பெண்ணிற்கு அணிகலன் நாணுடைமை
  • வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்.

முந்தைய ஆண்டு வினாக்கள்

மருந்துப் பெயரில் அமைந்த இரு நூல்கள்?
(A) திருக்குறள் – நாலடியார்
(B) திரிகடுகம் -ஏலாதி
(C) அகநானூறு – புறநானூறு
(D) நற்றிணை – குறுந்தொகை
(E) விடை தெரியவில்லை

திரிகடுகம் எனும் நூலின் வெண்பாக்களின் எண்ணிக்கை
(A) 100 – வெண்பாக்கள்
(B) 102 – வெண்பாக்கள்
(C) 200 – வெண்பாக்கள்
(D) 90 – வெண்பாக்கள்
(E) விடை தெரியவில்லை

‘திரிகடுகம்’ பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
(A) திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது
(B) திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்
(C) திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
(D) சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்

மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்
(A) திரிகடுகம், ஏலாதி
(B) இன்னாநாற்பது, இனியவை நாற்பது
(C) திருக்குறள், நன்னூல்
(D) நற்றிணை, அகநானூறு

‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப்பாராட்டுவது
(A) தொல்காப்பியம்
(B) அகத்தியம்
(C) பாயிரம்
(D) நன்னூல்

‘செரு அடுதோள்’ என்ற அடைமொழி பெற்றவர்
(A) விளம்பிநாகனார்
(B) கபிலர்.
(C) நல்லாதனார்
(D) பூதஞ்சேந்தனார்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!