ஏலாதி – கணிமேதாவியார்

ஏலாதி

  • ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • ஏலாதி நூலின் ஆசிரியர் கணிமேதாவியர்.
  • தமிழருக்கு அருமருந்து போன்றது ஏலாதி.
  • (நான்கு) 4 அடிகளில் (ஆறு) 6 கருத்துகளை சொல்கிறது ஏலாதி.
  • உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல் ஏலாதி.
  • உடல் நோயை தீர்க்கும் ஆறு மருந்து பொருட்கள் போன்று மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துக்களை கூறும் நூல் ஏலாதி.

ஏலாதி நூல் கூறும் (ஆறு) 6 மருந்துப் பொருள்

  1. இலவங்கம்,
  2. நாககேசரம் (சிறுநாவற்பூ)
  3. ஏலம்
  4. சுக்கு
  5. மிளகு
  6. திப்பிலி
  • ஏலாதி வெண்பா வகையால் இயற்றப்பட்டுள்ள நூல்.
  • ஏலாதி சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு 81 வெண்பாக்களை கொண்டுள்ளது
  • ஏலாதி நூலின் கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்.
  • ஏலாதி நூல் கூறும் உடலின் (ஆறு) 6 வகைத் தொழில்கள்
  1. எடுத்தல்
  2. முடக்கல்
  3. படுத்தல்
  4. நிமிர்தல்
  5. நிலைத்தல்
  6. ஆடல்

கணமேதாவியார்

  • ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியர்.
  • கணிமேதாவியருக்கு கணமேதாவியார் என்னும் மற்றொரு பெயரும் உண்டு.
  • கணிமேதாவியர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். இவர் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.
  • கணிமேதாவியர் எழுதிய மற்றொரு நூல் திணைமாலை 150 (நூற்றைம்பது).
  • கணிமேதாவியர் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.

சிறந்த மேற்கோள்

  • சாவது எளிது, அரிது சான்றாண்மை
  • நல்லது மேவல் எளிது, அரிது மெய் போற்றல்

முந்தைய ஆண்டு வினாக்கள்

ஏலாதி – எந்த நூல் வகையைச் சார்ந்தது? (3 Times)
(A) பதினெண்கீழ்க்கணக்கு
(B) ஐஞ்சிறுங்காப்பியம்
(C) ஐம்பெருங்காப்பியம்
(D) பதினெண்மேற்கணக்கு
(E) விடை தெரியவில்லை

ஏலாதி __________வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
(A) எழுபத்தொரு
(B) எண்பத்தொரு
(C) ஐம்பத்தொரு
(D) முப்பத்தொரு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
(A) கபிலர்
(B) மூவாதியார்
(C) நல்லாதனார்
(D) கணிமேதாவியார்

காரியாசன் ஒரு சாலை மாணாக்கராவர்
(A) மதுரைக் கூடலூர் கிழார்
(B) கணிமேதாவியார்
(C) நல்லாதனார்
(D) திருவள்ளுவர்

‘ஏலாதி’ பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், ‘ஏலாதி’
II. ‘ஏலாதி’ நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன
(A) II மற்றும் III
(B) III i IV
(C) I மற்றும் III
(D) I மற்றும் IV

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!