ஒடிசா ரயில் விபத்து பற்றி விவரி

விபத்தின் நிகழ்வுகள்

  • மூன்று வெவ்வேறு ரயில்கள் விபத்தில் சிக்கின.
  • ஒடிஸா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2-ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் நடந்த அந்த விபத்தில் 288+ பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில், முதலாவது பிரதான தடத்தில் சென்று கொண்டிருந்தது.
  • அந்த ரயிலுக்கு வழி விடுவதற்காக, சரக்கு ரயில் ஒன்று, பிரதான பாதையிலிருந்து பிரிந்து செல்லும் “லூப் லைன்’ எனப்படும் கூடுதல் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
  • சிக்னல் கோளாறா அல்லது “லூப் லைன்’ பிரிக்கப்பட்டது சரி செய்யாமல் விட்டதால் ஏற்பட்ட தவறா என்று தெரியவில்லை, பிரதான பாதையில் சென்று கொண்டிருந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் லூப் லைனில் நுழைந்து, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது.
  • கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு, இரண்டாவது பிரதான தண்டவாளத் தடத்தில் விழுந்து சிதறின. எதிர் திசையில் ஹெளரா நோக்கி வந்து கொண்டிருந்த பெங்களுரூ – ஹெளரா அதிவிரைவு ரயில் அந்தப் பெட்டிகளின் மீது மோதி அதன் பெட்டிகளும் தரம்புரண்டு சிதறின.

முந்தய ரயில் விபத்துகள்

  • பிகார் பாக்மதி ஆற்றில் 1981 ஜூன் மாதம் அடைமழை காரணமாக நடந்த விபத்தில் 750-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்;
  • 1995 ஆகஸ்ட் மாதம் ஃபிரோசாபாத் அருகே நடந்த விபத்தில் 305 பேர் பலியானார்கள்;
  • 1999 ஆகஸ்டில் மேற்கு வங்கம் வடக்கு பினாஜ்பூரில் நடந்த விபத்து 287 பேரின் உயிருக்கு முற்றுப்புள்ளி வைத்தது

ரயில்வே துறையின் முந்தைய கால நடவடிக்கைகள்

  • மூன்று வெவ்வேறு விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் கடந்த 15 ஆண்டுகளில் முயற்சி செய்திருக்கிறது. அவை எதுவுமே திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
  • ஓட்டுநர்கள் அதிவேகமாக இயக்கினாலோ, சிக்னல்களை புறக்கணித்தாலோ, வண்டியை நிறுத்தும் உபகரணம் மேல்மட்டக் குழுவின் பரிந்துரையால் கைவிடப்பட்டது.
  • நேரடி மோதலைத் தவிர்க்க இணைக்கப்பட்ட கருவியும் பயனளிக்கவில்லை. இந்தியாவில் உருவாக்கப்பட்ட “கவச்’ என்கிற பாதுகாப்பு உபகரணம் 2% இடங்களில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

ரயில்வே கட்டமைப்பு

  • 68,000 கி.மீ. நீளமுள்ள இந்திய ரயில்வே கட்டமைப்பு இந்தியாவின் உயிர்நாடி. நாள்தோறும் 20,000-க்கும் அதிகமான ரயில்கள் அந்தத் தண்டவாளங்களில் இயங்குகின்றன.
  • இரண்டரை கோடிக்கும் அதிகமானோர் பயணிக்கிறார்கள். 33.20 லட்சம் டன் சரக்குகளைக் கையாள்வதும் ரயில்வேதான்.
  • அதே நேரத்தில், தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன என்பதும் கசப்பான உண்மை.

கடந்த ஆறு ஆண்டுகளில் பெரிதும் சிறிதுமாக 246 ரயில் விபத்துகள் நடந்திருக்கின்றன.

அவற்றில், குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் 163 விபத்துகள் (75%) ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டிருக்கின்றன.

காரணங்கள்

  • பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பம் பொருத்தப்படாமல் இருப்பது.
  • போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது.
  • ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, 3.12 லட்சம் ஊழியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
  • கக்கோட்கர் கமிட்டி, டி.பி. திரிபாதி அறிக்கை போன்றவை ரயில் ஓட்டுநர்கள், ஊழியர்களின் பணிச்சுமை குறித்துக் குறிப்பிட்டிருக்கின்றன.
  • அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதிலும் அக்கறை செலுத்தப்படுவதில்லை.

Way Forward

  • ரயில்வே நவீனமயமாதல், ரயில் நிலையங்கள் மேம்பாடு, புதிய விரைவு ரயில்கள் அறிமுகம் போன்ற அனைத்துமே அத்தியாவசியம்தான். விபத்து ஏற்பட்டது என்பதற்காக அந்தத் திட்டங்கள் தடம்புரளக் கூடாது.
  • அதே நேரத்தில், தவறைக் கண்டுபிடித்தால் மட்டும் போதாது; அந்தத் தவறுகள் களையப்பட வேண்டும். அதில் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் ரயில்வேயின் மிகப் பெரிய குறைபாடு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!