பொருளாதார நிலைகள்
- குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதிய நிதிசாரா என்ற நூல் மௌரியர் காலத்து நூலான அர்த்தசாஸ்திரம் போன்ற நூல் ஆகும்.
- இந்நூல் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூல வளங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
- அரசு ஆவணங்களை அக்ஷபதலதிக்கிருதா என்ற அதிகாரி பராமரித்தார்.
- இரண்யவெஷ்தி என்றால் கட்டாய உழைப்பு என்று பொருள்.
வேளாண்மையும், வேளாண் அமைப்பும்
- பஹார்பூர் செப்பேடு அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது.
- பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தார்.
குப்தர் காலத்தில் நிலம் கீழ்வருமாறு வகைப்படுத்தப்பட்டிருந்தன.
க்ஷேத்ரா | பயிரிடக்கூடிய நிலம் |
கிலா | தரிசு நிலம் |
அப்ரஹதா | காடு அல்லது தரிசு நிலம் |
வாஸ்தி | குடியிருக்கத் தகுந்த நிலம் |
கபடசஹாரா | மேய்ச்சல் நிலம் |
பாசனம்
- நாரதஸ்மிருதி என்ற நூலில், வயல்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாத்த பந்தியா, பாசனத்திற்கு உதவிய கரா என்ற இருவகை அணைக்கரைகள் குறிப்பிடப்படுகின்றன.
- தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக அமரசிம்மர் குறிப்பிடுகிறார்.
- குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சனா ஏரி மிகவும் புகழ்பெற்றதாகும்.
சுரங்கமும் உலோகவியலும்
- இக்காலகட்டத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகள், இராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகள் ஆகியன பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன.
- மெஹ்ரோலி இரும்புத்தூண் (ஒற்றை இரும்புத்தூண்) பல நூற்றாண்டுகளாகத் துருப்பிடிக்காமல் அப்படியே இருக்கிறது.
நாணயங்கள்
- குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர் ஆவார்.
- குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன.
வணிகமும் வர்த்தகமும்
- சிரேஷ்டி,சார்த்தவஹா என்ற இருவேறுபட்ட வகைகளைச் சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.
- சிரேஷ்டி என்பவர் பொதுவாக ஒரே இடத்தில் தங்கியிருப்பவர்.
- சார்த்தவஹா என்பவர் இலாபத்திற்காக ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்தவர்.
- குப்தர் காலத்தில் மேற்குக் கரையில் கல்யாண், கால்போர்ட் ஆகிய வணிகத் துறைமுகங்களும், மலபார், மங்களூர் சலோபடானா, நயோபடான, பந்தேபடானா ஆகிய வணிகச் சந்தைகளும் இயங்கியுள்ளன.
- வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்குக் கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று பாஹியான் குறிப்பிடுகிறார்.
- அபூர்வமான ரத்தினக்கற்கள், மெல்லிய துணிவகைகள், வாசனைத் திரவியங்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து விற்கப்பட்டன.
- சீனாவிலிருந்து பட்டும், இதர பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன.