குப்தர்கள் ஆட்சியில் – பொருளாதார நிலைகள்

பொருளாதார நிலைகள்

  • குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதிய நிதிசாரா என்ற நூல் மௌரியர் காலத்து நூலான அர்த்தசாஸ்திரம் போன்ற நூல் ஆகும்.
  • இந்நூல் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூல வளங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • அரசு ஆவணங்களை அக்ஷபதலதிக்கிருதா என்ற அதிகாரி பராமரித்தார்.
  • இரண்யவெஷ்தி என்றால் கட்டாய உழைப்பு என்று பொருள்.

வேளாண்மையும், வேளாண் அமைப்பும்

  • பஹார்பூர் செப்பேடு அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது.
  • பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தார்.

குப்தர் காலத்தில் நிலம் கீழ்வருமாறு வகைப்படுத்தப்பட்டிருந்தன.

க்ஷேத்ராபயிரிடக்கூடிய நிலம்
கிலாதரிசு நிலம்
அப்ரஹதாகாடு அல்லது தரிசு நிலம்
வாஸ்திகுடியிருக்கத் தகுந்த நிலம்
கபடசஹாராமேய்ச்சல் நிலம்

பாசனம்

  • நாரதஸ்மிருதி என்ற நூலில், வயல்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாத்த பந்தியா, பாசனத்திற்கு உதவிய கரா என்ற இருவகை அணைக்கரைகள் குறிப்பிடப்படுகின்றன.
  • தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக அமரசிம்மர் குறிப்பிடுகிறார்.
  • குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சனா ஏரி மிகவும் புகழ்பெற்றதாகும்.

சுரங்கமும் உலோகவியலும்

  • இக்காலகட்டத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகள், இராஜஸ்தானிலிருந்து செம்புப் படிவுகள் ஆகியன பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன.
  • மெஹ்ரோலி இரும்புத்தூண் (ஒற்றை இரும்புத்தூண்) பல நூற்றாண்டுகளாகத் துருப்பிடிக்காமல் அப்படியே இருக்கிறது.

நாணயங்கள்

  • குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர் ஆவார்.
  • குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன.

வணிகமும் வர்த்தகமும்

  • சிரேஷ்டி,சார்த்தவஹா என்ற இருவேறுபட்ட வகைகளைச் சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.
  • சிரேஷ்டி என்பவர் பொதுவாக ஒரே இடத்தில் தங்கியிருப்பவர்.
  • சார்த்தவஹா என்பவர் இலாபத்திற்காக ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்தவர்.
  • குப்தர் காலத்தில் மேற்குக் கரையில் கல்யாண், கால்போர்ட் ஆகிய வணிகத் துறைமுகங்களும், மலபார், மங்களூர் சலோபடானா, நயோபடான, பந்தேபடானா ஆகிய வணிகச் சந்தைகளும் இயங்கியுள்ளன.
  • வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்குக் கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று பாஹியான் குறிப்பிடுகிறார்.
  • அபூர்வமான ரத்தினக்கற்கள், மெல்லிய துணிவகைகள், வாசனைத் திரவியங்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து விற்கப்பட்டன.
  • சீனாவிலிருந்து பட்டும், இதர பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!