சிறுபாணாற்றுப்படை- 4 -மலையமான் திருமுடிக்காரி

மலையமான் திருமுடிக்காரி – மலாடு, விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர்,

தென்பெண்ணை ஆற்றங்கரை

மலையமான் நாடு – காரி – (91-95)

பாடல்

கறங்குமணி வாலுளைப் புரவியொடு வையகம் மருள

ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த (காரி)

அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் கழல்

தொடித் தடக்கைக் காரியும்

சொல்லும் பொருளும்

  • கறங்கு  – ஒலிக்கும்
  • வாலுளை – வெண்மையான தலையாட்டம்
  • மருள் – வியக்க

பாடலின் பொருள்

உலகம் வியக்கும்படி வெண்மையான பிடரியுடன் தலையை ஆட்டும் குதிரைகளையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுப்பவன் காரி என்னும் வள்ளல்.

இவன், பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர் விடுகின்ற நீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன், தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன் காரி.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!