டீப் ஃபேக் தொழில்நூட்பம் என்பது என்ன? இந்த தொழில்நூட்பத்தின் சவால்களை விவாதிக்க

  • நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப்தொடர்பான ‘டீப் ஃபேக்’ காணொளிகள்சமீபத்தில் சமூக வலை தளங்களில் வெளியாகிபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. 
  • இதனைக் குறிப்பிட்டு நடிகை ராஷ்மிகா சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையுடன் தனது கருத்தைப் பகிர அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் டீப் ஃபேக் தொழில்நுட்பத்துக்கு எதிராகப் பதிவிடத் தொடங்கினர். 
  • மேலும், டீப் ஃபேக் தொடர்பாகப் புகார் பதிவு செய்யப் பட்ட 24 மணி நேரத்துக்குள் சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பக்கத்தில் இடம்பெற்றிருந்த காணொளிகளை அகற்றுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

டீப் ஃபேக் அறிமுகம்: 

  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டீப் ஃபேக் மூலம் காணொளி,ஒளிப்படம், ஒலித்துணுக்குகள் போன்றவை 2017ஆம்ஆண்டிலிருந்து சமூக வலைதளங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன. 
  • குறிப்பாக, ஆபாசக் காணொளிகளில் உள்ளவர்களின் முகங்களுக்குப் பதிலாகப் பிரபலங்களின் முகங்கள் போலியாக ஒட்டப்பட்டு ஆபாசத் தளங்களில் வெளியிடப்பட்டபோதுதான், டீப் ஃபேக் என்ற பதம் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. 
  • கடந்த சில மாதங்களில், டீப் ஃபேக் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது. 
  • 2023இல் டீப் ஃபேக் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. சைபர் கிரைம்குற்றவாளிகளும் மோசடியாளர்களும் இதை அதிகளவுபயன்படுத்தி வருவதாகவும், வருங்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் தனிப்பட்ட நபர்களின் தரவுகளைத் திருடுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான சைஃப்ரிமா (CYFRIMA) எச்சரித்திருக்கிறது.

டீப் ஃபேக் செயல்படும் விதம்: 

  • ஜெனரேட்டிவ் அட்வர்சரியல் நெட்வொர்க் (Generative Adversarial Network) எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படங்களையும் காணொளிகளையும் மாற்றியமைப்பதும் உருவாக்குவதும் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் அடங்கும். இவைசெயற்கை நுண்ணறிவு உதவியுடன் குறிப்பிட்ட நபரின்அசைவுகளையும் முகபாவனைகளையும் கண்டறிகின்றன. 
  • பின்னர், அவற்றை வேறொரு காணொளி, ஒளிப்படத்தில் நகலெடுக்கின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் டீப் ஃபேக் பதிவுகள் நுட்பமான தொழில்நுட்பங்களால் உருவாக்கப்படுவதால் மற்ற மென்பொருள்கள் மூலம் இவற்றை அடையாளம் காண்பது சற்றே கடினமானது. 
  • இதன் காரணமாகவே டீப் ஃபேக் தொழில்நுட்பம் அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டீப் ஃபேக் பயன்படுத்தப்படும் பின்னணி: 

  • இணையத்தில் ஒருவரைக் கேலி செய்வதற்கும் ஆபாசத் தளங்களில் போலியான காணொளிகளை உருவாக்குவதற்கும் டீப் ஃபேக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. 
  • அரசியல் தலைவர்களுக்கு எதிராகவன்முறையைத் தூண்டுவதற்கும், அரசியல்ரீதியானஉறவுகளைச் சீர்குலைப்பதற்கும், தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் டீப் ஃபேக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய சாத்தியம் உண்டு. 
  • பொதுவாகவே, எந்த ஒரு தொழில்நுட்பத்துக்கும் நேர்மறையான பண்புகளும் உண்டு, எதிர்மறையான பண்புகளும் உண்டு. டீப் ஃபேக் தொழில்நுட்பம் மேற்குறிப்பிட்ட எதிர்மறையான பண்புகளைக் கொண்டிருந்தாலும், அதன் அளவில் நேர்மறையான பண்புகளையும் கொண்டிருக்கிறது. 
  • உதாரணத்துக்கு, மருத்துவத் துறைகளில் அதன் பயன்பாடு குறிப்பிடத்தக்கது. மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்டுக் குரல் இழந்தவர்களுக்கு அவர்களது குரல்களைக் குளோனிங் செய்து, எதிர்காலத்தில் மீண்டும் உருவாக்குவதற்கு இம்மாதிரியான தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.

இந்தியச் சட்டங்கள் என்ன சொல்கின்றன? 

  • டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் உருவாகும் போலியான காணொளிகளிலிருந்து தனிமனிதர்களைப் பாதுகாக்கப் போதிய சட்டங்கள் இந்தியாவில் இருக்கின்றன. 
  • டீப் ஃபேக் தொழில்நுட்பம் குறித்துப் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள், சம்பந்தப்பட்ட தளங்களில் இடம்பெற்றுள்ள போலி காணொளிகளையும் ஒளிப்படங்களையும் நீக்க வேண்டும் என்று இந்தியத் தொழில்நுட்ப விதிமுறை 2021 கூறுகிறது. 
  • நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் காணொளி வைரலானபோது, இந்தியத் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக வலைதளங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 
  • அதில், “இணையத்தில் ஆள்மாறாட்டம் செய்வது 2000ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66Dஇன் கீழ் சட்டவிரோதமானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற நாடுகளில்: 

  • டீப் ஃபேக் தொழில்நுட்பம் தவறாகப்பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நாடுகள் சட்டங்களை இயற்றியுள்ளன. 
  • சமூக வலைதளங்களில் போலிகளை அடையாளம் காண்பதற்கென தனிநபர்களை நியமித்து, அவர்களுக்கு உரிய வழிகாட்டு முறைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் வரை யறுத்திருக்கிறது. 
  • டீப் ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிகளைக் கண்டறிவதற்கென உரியவழிகாட்டுதல்களைப் பயனர்களுக்குச் சீனா வழங்கியிருக்கிறது. 
  • அடுத்ததாக, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா டீப் ஃபேக் பணிக்குழுச் சட்டத்தை (Deepfake Task Force Act) அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!