பொருளாதார வகைகள்

முதலாளித்துவம் / அங்காடிப் பொருளாதாரம்:

  • ஆடம் ஸ்மித் அவர்களின் நாடுகளின் செல்வம் என்ற நூலின் மூலம் இந்த முதலாளித்துவ பொருளாதாரம் முக்கியத்துவம் பெறுகிறது.
  • இந்த அமைப்பில் தலையிடா கொள்கை பின்பற்றப்படுகிறது.
  • ஆடம் ஸ்மித் அவர்கள் முதலித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • நாட்டின் உற்பத்தி பெருமளவுக்கு தனியார்துறை வசம் இருந்தால் அது முதலாளித்துவப் பொருளாதாரம் (Capitalistic Economy)
  • முதலாளித்துவம் / அங்காடிப் பொருளாதாரத்தில் தடையில்லா சந்தைகளின் (Free market) மூலமே பண்டங்களின் உற்பத்தி மற்றும் பகிர்வு தீர்மானிக்கப்படுகிறது.
  • .கா.- USA, ஆஸ்திரேலியா, ஜப்பான்

பொதுவுடைமை / கட்டளைப் பொருளாதாரம்:

  • நாட்டின் மொத்த திட்டமிடல், பொதுத்துறை நிறுவனங்கள், பொருளாதார நடவடிக்கையில் அரசின் கட்டுப்பாடு போன்றவற்றை பற்றி குறிப்பிடுகிறது.
  • நாட்டின் பெரிய நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமாகவோ,அரசின் கட்டுபாட்டிலோ இருக்கும்.
  • இது திட்டமிட்ட பொருளாதாரம் அல்லது கட்டளை பொருளாதாரம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • நாட்டின் உற்பத்தி பெருமளவுக்கு பொதுத்துறை வசம் இருந்தால் அது சமத்துவப் பொருளாதாரம் / சமதர்ம பொருளாதாரம் (Socialistic Economy)
  • .கா.- சீனா, கியூபா, வியட்நாம், போலந்து, வடகொரியா

கலப்புப் பொருளாதாரம்:

  • நாட்டின் உற்பத்தியைப் பொதுத்துறை, தனியார் துறை இரண்டும் இணைந்து கவனிப்பதே கலப்புப் பொருளாதாரம்.
  • இது முதலித்துவ பொருளாதாரம் மற்றும் சமதர்ம பொருளாதாரம் ஆகியவற்றின் தீய விளைவுகளை நீக்க கொண்டுவரப்பட்டது.
  • எ.கா. இந்தியா, இங்கிலாந்து,பிரான்ஸ்,பிரேசில்
  • உலக கலப்புப் பொருளாதாரத் தந்தை – ஜான் கீன்ஸ்
  • இந்தியக் கலப்புப் பொருளாதாரத் தந்தை – ஜவஹர்லால் நேரு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!