முதுமொழிக்காஞ்சி – மதுரைக் கூடலூர் கிழார்

முதுமொழிக்காஞ்சி

  • முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்க் கிழார்.
  • முதுமொழிக்காஞ்சி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று.
  • முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று.
  • உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக்கூறி கற்போரின் குற்றங்களை நீக்கி அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை கூறுகிறது முதுமொழிக்காஞ்சி.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறவுரைக்கோவை எனவும் முதுமொழிக்காஞ்சி வழங்கப்படுகிறது.
  • ஆத்திச்சூடியின் முன்னோடி என அழைக்கப்படுவது முதுமொழிக்காஞ்சி,
  • முதுமொழி மூத்தோர் சொல். /காஞ்சி – மகளிர் இடையணி.
  • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
  • முதுமொழிக்காஞ்சி நூலில் மொத்தம் (நூறு) 100 பாடல்கள் உள்ளன.
  • முதுமொழிக்காஞ்சி (பத்து) 10 பிரிவும், பிரிவுக்கு (பத்து) 10 பாடல்களும் உள்ளது.
  • முதுமொழிக்காஞ்சி குறள் தாழிசை, குறள் வெண் செந்துறை வகை பாடல்களால் இயற்றப்பட்டது.
  • சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது முதுமொழிக்காஞ்சி சிறந்த பத்து.
  • முதுமொழிக்காஞ்சியின் ஒவ்வொரு பத்தும், ஆர்கலி உலகத்து என்று தொடங்குகிறது

முதுமொழிக்காஞ்சி நூலின் (பத்து) 10 பிரிவுகள்

    1. எளிய பத்து
    2. அறிவுப்  பத்து
    3. சிறந்த பத்து
    4. நல்கூர்ந்த பத்து
    5. துவ்வாப்பாத்து
    6. தாண்டாப் பத்து
    7. பொய்யாப் பத்து
    8. அல்ல பத்து
    9. பழியாப்பத்து
    10. இல்லை பத்து

மதுரைக் கூடலூர் கிழார்

  • முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார்.
  • மதுரைக் கூடலூர் கிழார் பிறந்த ஊர் கூடலூர்.
  • மதுரைக் கூடலூர் கிழாரின் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய ஆசிரியர்கள் மேற்கோளாகக்  கையாண்டுள்ளார்கள்.
  • மதுரைக் கூடலூர் கிழார் சங்க காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்.

முதுமொழிக்காஞ்சி நூலின் சிறந்த தொடர்கள்

  • இன்பம் வேண்டுவோம் துன்பம் தண்டான்
  • இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை
  • ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை
  • கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
  • காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப்படுதல்
  • குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று
  • செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று
  • நலனுடைமையின் நாணுச் சிறந்தன்று
  • முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று.
  • மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை
  • வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை
  • ஈரம் இல்லாதது கிளை நட்பன்று
  • நசையிற் சிறந்த நல்குர வில்லை
  • நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.

முந்தைய ஆண்டு வினாக்கள்

“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்”
-எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
(A) முதுமொழிக் காஞ்சி
(B) ஏலாதி
(C) இனியவை நாற்பது
(D) இன்னா நாற்பது

‘முதுமொழிக் காஞ்சி’ என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக. (4 Times)
(A) நீதி நெறி கோவை
(B) அறம் பாடும் கோவை
(C) அறவுரைக் கோவை
(D) நல்வழிக் கோவை
(E) விடை தெரியவில்லை

மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
(A) கற்றது மறவாமை
(B) ஒழுக்கம் உடைமை
(C) கண்ணஞ்சப் படுதல்
(D) வாய்மை உடைமை

“குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று” இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) நாலடியார்
(B) ஏலாதி
(C) திரிகடுகம்
(D) முதுமொழிக்காஞ்சி

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!