முடியரசன்

  • முடியரசனின் இயற்பெயர் துரை ராசு.

முடியரசன் எழுதியுள்ள நூல்கள்

  • காவியப்பாவை
  • பூங்கொடி
  • புதியதொரு விதி செய்வோம்
  • வீர காவியம்
  • திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர் முடியரசன்.

நானிலம் படைத்தவன் – முடியரசன்

  • தமிழரின் வணிக மேன்மையை கூறும் பாடல்.
  • புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது
  • காடுகளைத் திருத்தி விளை நிலங்கள் உருவாக்கி பயிர்களை விளைவித்து ஊர்களை உருவாக்கிக் கூடி வாழ்ந்து தொழில் வணிகம் மூலம் தன் வாழ்வை மேம்படுத்திக் கொண்ட தமிழரின் வணிக மேன்மையை கூறும் பாடல்.

கவிதை

கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி

ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன் பெற்றான், மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் நானிலத்தைக் கண்ட பெரும் நாகரிக மாந்தன் அவன், * * *

ஆழக் கடல் கடந்தான் அஞ்சும் சமர் கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடி பொறித்தான்

முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகு முதற், பண்டங்கள் ஏற்றிப் பயன் நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்,

அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் * **

– முடியரசன்

சொல்லும் பொருளும்

  • மல்லெடுத்தவலிமை பெற்ற
  • வீரம் – மறம்
  • சமர் போர்
  • எக்களிப்பு – பெரு மகிழ்ச்சி
  • கலம்கப்பல்
  • நல்கும் – தரும்
  • ஆழி கடல்
  • கழனிவயல்

முந்தைய ஆண்டு வினாக்கள்

“ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்” – என்று பாடியவர் யார்?
(A) பாரதிதாசன்
(B) கண்ணதாசன்
(C) முடியரசன்
(D) பாரதியார்

தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?
(A) சகலகலா வல்லி மாளல
(B) பூங்கொடி
(C) மணிக்கொடி
(D) உரிமை வேட்கை

காரைக்குடி. மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்
(A) சுரதா
(B) கண்ணதாசன்
(C) முடியரசன்
(D) நா. காமராசன்
குன்றக்குடி அடிகளாரால் ‘கவியரசு’ என்னும் பட்டம் பெற்றவர்
(A) ந. பிச்சமூர்த்தி
(B) கவிஞர் சுரதா
(C) பாரதிதாசன்
(D) முடியரசன்
குன்றக்குடி அடிகளாரால் ‘கவியரசு’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?
(B) கண்ணதாசன்
(A) வைரமுத்து
(C) வாணிதாசன்
(D) முடியரசன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!