Contents show
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- இந்திய தேசிய காங்கிரஸ் ஜூலை 14, 1942 இல் வார்தாவில் கூடியது.
- இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த இராஜாஜியும் புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர்.
- நேருவும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டார்.
- காந்தி 1942 மே 16 அன்று ஒரு பத்திரிகைய பேட்டியில் இவ்வாறு வெளிப்படுத்தினார்: “இந்தியாவைக் கடவுளிடம் விட்டுவிடுங்கள், அது அதீதமான ஒன்றாக இருக்குமானால் அதை இயற்கையின் அராஜகப் போக்கில்கூட விட்டுவிடுங்கள். இவ்வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை கொண்ட அராஜகம் நீங்கிச் செல்வதால் முற்றிலும் தறிகெட்டு சட்டசீர்கேடு ஏற்பட்டாலும் அந்த ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்“.
- பம்பாயில் 1942 ஆகஸ்டு மாதம் 8 ஆம் நாள் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்திற்கு வித்திட்டதுடன் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்ட கோரிக்கை வைத்தது.
- செய் அல்லது செத்துமடி என்ற முழக்கத்தை காந்தியடிகள் வெளியிட்டார்.
- காந்தி கூறினார், ‘நாம் ஒன்று இந்தியாவை விடுவிப்போம் அல்லது அந்த முயற்சியில் இறப்போம்; ஆனால் எங்கள் அடிமைத்தனம் நீடிப்பதைக் காண நாங்கள் உயிருடன் இருக்கமாட்டோம்.”
- ஆனால் மறுநாள் அதிகாலை 9 ஆகஸ்ட் 1942 அன்று காந்தி மற்றும் ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- வேகமும் அதன் தீவிரமும், லின்லித்கோ, சர்ச்சிலுக்கு எழுதினார், போராட்டங்களை 1857 க்குப் பிறகு நடந்த மிகத் தீவிரமான கிளர்ச்சி என்று விவரித்தார், அதன் ஈர்ப்பு மற்றும் அளவு இராணுவ பாதுகாப்பு காரணங்களுக்காக நாம் இதுவரை உலகிலிருந்து மறைத்துவிட்டோம்.
இயக்கத்தின் பரவல்
- காந்தி மற்றும் காங்கிரஸின் பிற முக்கிய தலைவர்கள் சிறையில் இருந்த நிலையில், சோசலிஸ்டுகள் இயக்கத்திற்கு தலைமை தாங்கினர்.
- இயக்கத்தில் காங்கிரஸ், சோசலிஸ்டுகள் மற்றும் பார்வர்டு பிளாக் ஆகியவை ஒன்றாக பங்கேற்றன.
- ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் ராமானந்த் மிஸ்ரா ஆகியோர் சிறையிலிருந்து தப்பித்து, திரைமறைவு இயக்கத்தை ஏற்பாடு செய்தனர்.
- அருணா ஆசப் அலி போன்ற பெண் ஆர்வலர்கள் முக்கியப் பணி ஆற்றினார்கள்.
- பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டதால், கிளர்ச்சியாளர்கள் பம்பாயிலிருந்து ஒரு ரகசிய வானொலி ஒலிபரப்பு அமைப்பை அமைத்தனர்.
- உஷா மேத்தா நிறுவிய காங்கிரஸ் வானொலி திரைமறைவில் இருந்தபடியே 1942 நவம்பர் மாதம் வரை வெற்றிகரமாகச் செயல்பட்டது. இந்தக் கிளர்ச்சியை கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசு முழு பலத்தையும் பயன்படுத்தியது.
- இயந்திரத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
- சில இடங்களில் விமானங்கள் மூலமாகவும் குண்டுகள் வீசப்பட்டன.
- மொத்தமாக அபராதங்கள் விதிக்கப்பட்டு அவை உரிய வேகத்தில் வசூலிக்கப்பட்டன.
- வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மறியல் என மக்கள் தங்களால் இயன்ற எந்த வடிவத்திலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- மக்கள் அரசு கட்டிடங்கள், ரயில் நிலையங்கள், தொலைபேசி மற்றும் தந்தி இணைப்புகள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரத்தின் சின்னங்களாக நின்ற அனைத்தையும் தாக்கினர்.
- சதாரா, ஒரிசா, பீகார், ஐக்கிய மாகாணங்கள் மற்றும் வங்காளத்தில் இணை அரசாங்கங்கள் நிறுவப்பட்டன.
- கிளர்ச்சியாளர்கள் காலனித்துவ நிர்வாகத்திலிருந்து விடுவித்த ‘தேசிய அரசாங்கங்களை‘ கூட அமைத்தனர்.
- இதன் ஒரு உதாரணமாக வங்காளத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் 1944 வரை ஏற்படுத்தப்பட்டிருந்த ‘தம்லுக் ஜாட்டியா சர்க்கார்’ (Tamluk Jatiya Sarkar) அரசைக் கூறலாம்.
- ஆசம்கரின் ஆட்சியராக இருந்து புரட்சியாளர்களின் மீது போதுமான நடவடிக்கை எடுக்க தவறியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட R.H.நிப்ளெட் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்தப் பதிவின்படி ‘பிரிட்டிஷார் காவல்துறையினரின் மூலமாகப் பல கிராமங்களைத் தீக்கிரையாக்கியதோடு பல மைல்களுக்குத் தீயைப் பரவவிட்டு ‘வெள்ளை பயங்கரத்தை அரங்கேற்றி அடக்குமுறையை ஆட்சிமுறை என்ற அளவுக்கு அக்காலகட்டத்தில் நடந்து கொண்டார்கள்” என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
- காந்தி 1943 பிப்ரவரி மாதம் இருபத்தோரு நாட்களுக்கான உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனால் அவரது உயிருக்குப் பெரும் அச்சுறுத்தல் நிலவியது.
காந்தியின் விடுதலை
- 1944 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி உடல்நலக் காரணங்களுக்காக காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது, ஆக்கபூர்வமானச் செயல் திட்டத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.
- லின்லித்கோ பிரபுவிற்குப் பின் அக்டோபர் 1943 இல் அரசபிரதிநிதிப் பதவியேற்ற ஆர்கிபால்டு வேவல் பிரபு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைச் சுற்றுக்கு ஆயத்தப்படுத்தலானார்.
- இயக்கம் ஒடுக்கப்பட்டாலும், தேசியவாதத்தின் ஆழத்தையும், அதற்காக மக்கள் தியாகம் செய்யத் தயாராக இருப்பதையும் அது நிரூபித்தது.
- கிட்டத்தட்ட 7000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60,000 க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- குறிப்பிடத்தக்க வகையில் இது அரசு எந்திரத்தின் மீதான காலனித்துவ மேலாதிக்கம் பலவீனமடைந்து வருவதையும் நிரூபித்தது.
- சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் பணி, இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களை அகற்றும் எண்ணத்தை வலுப்படுத்தியது.
- காவலர்கள் உட்பட பல அதிகாரிகள் தேசியவாதிகளுக்கு உதவினர்.
- ரயில் வண்டி இஞ்சின் ஓட்டுனர்களும் மற்றும் கப்பலோட்டிகளும் குண்டு வெடிப்புப் பொருட்களையும் இதரப் பொருட்களையும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக கடத்தினார்கள்.