ஹரப்பா – தெருக்களும், வீடுகளும்

தெருக்களும், வீடுகளும்

  • நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களின் குறிப்பிடத்தக்க கூறுகள்.
  • ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட, சுடாத செங்கற்களையும் கற்களையும் பயன்படுத்தினர்.
  • தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன. தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன.
  • அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன.
  • அவை ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக்கொள்ளும் படியும் இருந்தன.
  • பெரிய தெருக்கள் 33 அடி அகலமும், சிறிய தெருக்கள் 9 அடிமுதல் 12 அடிவரை அகலம் கொண்டதாகவும் இருந்தன.
  • சாலைகள் அகலமாகவும், வளைவான முனைகளைக் கொண்டதாகவும் இருந்தன.
  • வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை உடையனவாக காணப்படுகின்றன. பெரும்பாலான வீடுகள் பல அறைகளையும் ஒரு முற்றத்தையும் ஒரு கிணற்றையும் கொண்டிருந்தன.
  • ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், குளியலறையும் இருந்திருக்கின்றன.
  • அரண்மனைகளோ, வழிபாட்டுத் தலங்களோ இருந்ததை தீர்மானிக்கக் கூடிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கழிவு நீர் அமைப்பு

  • ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவு நீர் வடிகால் அமைப்பு இருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!