திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 2

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள்

திருக்குறள்

  • திருக்குறள் பதினெண்கீழக்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல்.
  • திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று, அஃது ஒரு வாழ்வியல் நூல்.
  • தமிழ் நூல்களில் ‘திரு’ என்னும் அன்டமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.
  • திரு + குறள் – திருக்குறள்.
  • குறள் – இரண்டடி வெண்பா
  • திரு – சிறப்பு அடைமொழி.
  • சிறந்த குறள் வெண்பாகளால் ஆகிய நூல் ஆதலால் திருக்குறள் என்று பெயர் பெற்றது.
  • அடையடுத்த கருவி ஆகுபெயர் என்பது திருக்குறள் ஆகும்.
  • தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் திருக்குறள்.
  • (ஏழு) 7 சீர்களில் மனிதர்களுக்கு வாழ்வியல் நெறிகளையும் அறத்தையும் கற்றுத் தரும் நூல் திருக்குறள்.
  • “இதில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் திருக்குறள் சிறந்து விளங்குகிறது.
  • இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்று திருக்குறளை சொல்வர்.
  • உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல், திருக்குறள்.
  • இஃது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும் எவ்வகையிலும் பொருந்தும் வகையில் அமைந்தமையால் உலகப் பொதுமறை என்று திருக்குறள் போற்றப்படுகிறது.
  • மனித நகாரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல் திருக்குறள்
  • பிற அற நூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் நூல் திருக்குறள்.
  • உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள்.
  • இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை திருக்குறள்.
  • எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல் திருக்குறள்.

திருக்குறள் நூல் அமைப்பு

திருக்குறள் பா வகை

  • 1330 குறள்பாக்களால் ஆனது திருக்குறள்.
  • திருக்குறள் பாடல்கள் அனைத்தும் குறள் வெண்பா என்னும் பா வகையால் ஆனவை.
  • பாவின் வகையைத் தன் பெயராகக் கொண்டு உயர்வு விகுதியாகத் ‘திரு’ என்னும் அடைமொழியுடன் திருக்குறள் என்று அழைக்கப்படுகிறது.

திருக்குறளுக்கு வேறு பெயர்கள்

வாயுறை வாழ்த்து                                         உத்தர வேதம்

அடையடுத்த கருவி ஆகு பெயர்       இரண்டடி வெண்பா     அற இலக்கியம்

தெய்வ நூல்                                                         பொருளுரை                     பொய்யா மொழி

உலகப் பனுவல்                                                முப்பால்                              முதுமொழி

பொது மறை                                                        தமிழ் மறை                      உலகப் பொது மறை

திருக்குறளில் பால் – இயல் -அதிகாரங்கள்

  • திருக்குறள் 3 பால் பிரிவு 9 இயல் 133 அதிகாரம் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் (மூன்று) 3 பிரிவுகளைக் கொண்டது.
  • அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் (நான்கு) 4 இயல்களைக் கொண்டது.
  • பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும்(மூன்று) 3 இயல்களைக் கொண்டது.
  • இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் (இரண்டு) 2 இயல்களைக் கொண்டது.
  • இதில் அறம் – 38, பொருள் – 70, இன்பம் – 25 என அதிகாரங்கள் உள்ளன. (38 70 25)
  • அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  • பால் இயல் அதிகாரங்கள்

           பால்                                        இயல்கள்                                            அதிகாரங்கள்

அறம்                                         4                                                                   38

பொருள்                                   3                                                                   70

இன்பம்                                     2                                                                    25

அறம்பால் இயல்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை

பாயிரவியல்                                  4

இல்லறவியல்                              20

துறவறவியல்                               13

ஊழியல்                                             1

பொருட்பால் இயல்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை

அரசியல்                                            25

அமைச்சியல்                                  32

ஒழிபியல்                                        13

இன்பத்துபால் இயல்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை

களவியல்                                        7

கற்பியல்                                          18

பால்அதிகாரங்கள்

பால்                                         அதிகாரங்கள்

அறம்                                                 38

பொருள்                                           70

இன்பம்                                             25

 

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!